தங்கம் விலை வரலாற்றில் புதிய சாதனை – ஒரு கிராம் ரூ.11,000 தாண்டியது! நகை பிரியர்கள் அதிர்ச்சி

019.jpg

சென்னை: தங்கத்தின் விலை இன்று வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தங்கம் விலை ரூ.110 வரை அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,060-க்கும், ஒரு சவரன் ரூ.88,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமையன்று ஒரு சவரன் தங்கம் ரூ.87,600-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று விலை ரூ.880 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனுடன், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.166-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்வதற்கான முக்கிய காரணங்கள் — சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்காவின் வரிவிதிப்பு கொள்கை மற்றும் முதலீட்டாளர்களின் தங்கத்திற்கான அதிக தேவை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த உயர்வால் நகை விரும்பிகள் திணறி வருகின்றனர். அதிலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மக்கள் தங்க நகை வாங்கத் தயக்கம் காட்டுகின்றனர்.

ஆனால், நகை வியாபாரிகள் கூறுவதாவது — “விலை எவ்வளவு உயர்ந்தாலும், இந்தியர்களின் தங்கப் பற்றுக்கு குறைவில்லை. ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் வரை சென்றாலும் ஆச்சர்யமில்லை” என்கிறார்கள்.

கடந்த சில நாட்களின் விலை நிலவரம் இதோ

06.10.2025: ₹88,480

05.10.2025: ₹87,600

03.10.2025 (மாலை): ₹87,200

03.10.2025 (காலை): ₹86,720

தினமும் புதிய உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் தங்கம் விலை, தீபாவளி வரை மேலும் உயரும் வாய்ப்பு அதிகம் என வணிக நிபுணர்கள் கணித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *