இந்தியர்களின் வாழ்வில் தங்கம் என்பது ஒரு ஆடம்பர பொருள் மட்டுமல்ல; அது ஒரு முதலீட்டு பாதுகாப்பு என்றும் கருதப்படுகிறது. திருமணம், விழாக்கள், சேமிப்பு முதலியவற்றில் தங்கம் எப்போதும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக தங்கம் விலையில் அதிக ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் மக்கள், “இப்போதே வாங்கலாமா அல்லது விலை குறையும் வரை காத்திருக்கலாமா?” என்ற குழப்பத்தில் உள்ளனர்.

தங்க விலை – சமீபத்திய நிலவரம் :
இந்த வாரம் சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு மற்றும் எண்ணெய் விலை மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலை உயரும், சரியும் நிலையில் உள்ளது. இந்திய சந்தையில், 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ₹10,641 வரை விற்பனையாகி வருகிறது. 24 கேரட் (தூய தங்கம்) விலை இதைவிட சற்று அதிகமாக உள்ளது.
ஏற்ற இறக்கங்களுக்கு காரணம் என்ன?
சர்வதேச சந்தை – அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் பொருளாதார சவால்கள், வட்டி விகித மாற்றங்கள். டாலர் மதிப்பு – டாலர் வலுப்பட்டால் தங்க விலை குறையும்; டாலர் பலவீனமடைந்தால் தங்க விலை உயரும்.கச்சா எண்ணெய் விலை – எண்ணெய் விலை அதிகரிப்பால் கூடுகிறது; அதனால் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.உள்நாட்டு தேவை – திருமண காலம், பண்டிகைகள் வந்தால் தங்கம் வாங்கும் ஆர்வம் அதிகரித்து விலையை உயர்த்துகிறது.

இப்போது வாங்கலாமா?
சில நிபுணர்கள் கூறுவதாவது, தங்கம் எப்போதும் நீண்டகால முதலீடு செய்ய ஏற்றது. குறுகிய காலத்தில் விலை அதிகரித்தாலும், சரிந்தாலும், நீண்டகாலத்தில் தங்கம் ஒரு பாதுகாப்பான சொத்து. தற்போது விலை சிறிது அதிகமாக இருந்தாலும், திருமணங்கள் அல்லது அவசியமான தேவைக்காக வாங்குபவர்கள் சிறிய அளவில் வாங்கிக் கொள்ளலாம்.
காத்திருக்கலாமா?
முதலீட்டுக்காக மட்டும் பார்க்கும்வர்கள், சில வாரங்கள் காத்திருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். சர்வதேச சந்தை சற்று நிலைத்த பின் தங்க விலையில் குறைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் பெரும் அளவில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் விலை நிலவரத்தை கவனித்து, அடுத்த கட்டத்தில் வாங்கலாம்.
முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை:
தொடர்ந்து வாங்கும் பழக்கம் (SIP) – சிறிய அளவுகளில் தங்கம் வாங்குவது (Gold SIP, Digital Gold, ETF) பாதுகாப்பானது. டிஜிட்டல் முதலீடு – Physical gold-ஐ விட ETF, Sovereign Gold Bond போன்றவற்றில் முதலீடு செய்தால் வட்டியுடன் கூடுதல் வருமானம் கிடைக்கும். நீண்டகால நோக்கம் – 5–10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் எப்போதும் அதிக மதிப்பைத் தரும்.
Summary: Gold prices in India have been witnessing sharp ups and downs in recent weeks. Currently, 22K gold trades between ₹9860- ₹10600 per gram, while 24K remains slightly higher. Experts attribute this volatility to factors such as global market uncertainties, dollar value shifts, oil price fluctuations, and seasonal wedding demand.
Financial advisors recommend that buyers with immediate needs, such as weddings and festivals, can make small purchases now. However, investors focused on wealth building may benefit by waiting a few weeks until prices stabilize. Long-term investors are encouraged to diversify through Gold SIPs, ETFs, and Sovereign Gold Bonds, which not only protect wealth but may also yield better returns.
In short, whether to buy now or wait depends on your personal need versus investment goals.