கல்வி, மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை இணையும் ஒரு முயற்சியாக 2025ம் ஆண்டின் தீபாவளி பரிசை Google அறிவித்துள்ளது.
இந்திய மாணவர்களுக்கு Google AI Agents Intensive Courses-யை 5 நாட்கள் கொண்ட இலவச செயற்கை நுண்ணறிவு (AI course ) பாடநெறியை வழங்குவதன் மூலம், டிஜிட்டல் அறிவின் ஒளியை அனைவருக்கும் பரப்பும் முயற்சியில் இந்த திட்டம் உருவாகியுள்ளது.
தீபாவளி பரிசு: Google-ன் இலவச AI Course விவரங்கள்:
Google நிறுவனம் தனது புதிய Google Skills AI கல்வி தளத்துடன் சேர்த்து , மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்காக ஒரு 5 நாள் “AI Agents Intensive Course”யை இலவசமாக வழங்குகிறது.
இந்த தளத்தில் Google Cloud, DeepMind, மற்றும் Grow with Google போன்ற பிரிவுகள் இணைந்து புதிய டிஜிட்டல் செயற்கை நுண்ணறிவு பாடங்களை உருவாக்கியுள்ளன.
பாடங்களின் முக்கிய அம்சங்கள்:
5 நாட்கள் முழுவதுமாக AI அடிப்படைப் பாடங்கள் (AI fundamentals, Agent creation, Gemini tools).
தகுதி: இந்திய மாணவர்கள், 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
கற்றல் வடிவம்: ஆன்லைன், நேரடி வழிகாட்டலுடன்
முடிவில் வழங்கப்படும் சான்றிதழ்: Google AI Learning Badge.
இந்த முயற்சி, மாணவர்கள் தங்களுடைய காலத்தை பயனுள்ளதாகக் கழித்து, டிஜிட்டல் திறன்மிக்க எதிர்காலத்தை உருவாக்கிட உதவுகிறது.
இந்த பாடநெறி இந்திய மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்புவோர் Google Account மூலம் “Google AI Agents Intensive” பக்கத்துக்குச் சென்று தங்களது கல்வி விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
AI Learning: தொழில்வாய்ப்பை விரிவுபடுத்தும் கூகிள் -ன் முயற்சி:
Google நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் “AI for Everyone” என்ற தொழில்நுட்பக் கல்வியை உலக அளவில் பரவச் செய்துள்ளது. இந்த தீபாவளியின் பரிசாக, AI எஜெண்டுகள் உருவாக்கும் திறனை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது.
Google Skills தளம் தற்போது 3,000க்கும் மேற்பட்ட AI மற்றும் Cloud சார்ந்த பாடநெறிகளை வழங்குகிறது. இதில் உள்ள முக்கிய அம்சங்கள்:
AI- இயங்கும் ஆய்வகங்கள் : Gemini Enterprise AI கருவிகளைப் பயன்படுத்திச் செயல்முறைப் பயிற்சி.
திறன் பேட்ஜ்கள்: ஒவ்வொரு பாடநெறி முடிந்ததும் நேரடியாகப் பெறப்படும் சான்றுகள்.
வைப் கோடிங் தொகுதிகள் : code எழுதிப் பரிசோதிக்கும் கற்றல் சூழல்.
Gamified Learning: மாணவர்கள் தங்களுக்குள் போட்டியிடும் வாய்ப்பு.
இந்த வகை கற்றல் முறைகள் தொழில்முறை வளர்ச்சிக்கும் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
Google-Ipsos ஆய்வுகளின் படி, 74% நிறுவன அதிகாரிகள் AI-based learning தங்கள் பணியாளர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தி இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
Summary:
As a special Diwali initiative, Google has launched free AI courses for Indian students. This program aims to make Artificial Intelligence education accessible to all. Students can learn cutting-edge AI tools and earn certificates from Google. A golden opportunity to build future-ready tech skills this festive season.