திரைப்பட பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட அநாகரீகமான கேள்விக்கு நடிகை கௌரி கிஷன் தைரியமாக பதிலடி கொடுத்த விதம் தற்போது திரையுலகில் பாராட்டைப் பெற்றுள்ளது.

“அதர்ஸ்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கௌரி கிஷனின் உடல் எடை குறித்து எழுப்பப்பட்ட கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாயகனாக அறிமுகமாகும் ஆதித்யா மாதவனுடன் கௌரி கிஷன் ஜோடி சேர்ந்திருக்கும் இந்த படம், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் நவம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது.
சில நாட்களுக்கு முன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், “நாயகனுடன் நடனமாடியபோது கௌரியை தூக்குவது கடினமா?” என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு அப்போது அமைதியாக இருந்த கௌரி, பின்னர் யூடியூப் பேட்டியில் கடுமையாகப் பதிலளித்தார்.
அதில், “அந்த கேள்வி மூளை இல்லாதவரின் பேச்சை போன்றது. இப்படியான கேள்விகளை யாரிடமும் கேட்காதீர்கள்” என அவர் கடுமையாகக் கூறினார்.
இதனால், நேற்று (நவம்பர் 6) நடைபெற்ற ‘அதர்ஸ்’ சிறப்பு திரையிடல் பத்திரிகையாளர் சந்திப்பில் அதே செய்தியாளர் கௌரியை குறிவைத்து, “அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வாதிட்டார். ஆனால், அச்சமின்றி கௌரி கிஷன் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவித்தார். “இங்கிருக்கும் பெரும்பாலானவர்கள் ஆண்கள். என்னை பேச விடாமல் கார்னர் செய்கிறீர்கள். ‘அதர்ஸ்’ படத்துக்கும் என் உடல் எடைக்கும் என்ன சம்பந்தம்? நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்; மாறாக, நீங்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் கேட்ட கேள்வி முட்டாள்தனமானது. இதே கேள்வியை ஒரு ஹீரோவிடம் கேட்பீர்களா?” — என்று தைரியமாக எதிர்வினையாற்றினார் கௌரி கிஷன்.
இந்த தைரியமான பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குநர் பா.ரஞ்சித், நடிகை குஷ்பு, பாடகி சின்மயி, இயக்குநர் ரத்னகுமார் உள்ளிட்ட திரையுலக பிரபலர்கள் கௌரியின் நிதானத்தையும் துணிச்சலையும் பாராட்டியுள்ளனர்.
Summary :
Gouri Kishan’s bold stand against a reporter’s body-shaming question at the “Others” movie event wins massive support from film celebrities.







