உலகம் முழுவதும் நவம்பர் 2 அன்று ‘சகல ஆன்மாக்கள் நினைவு நாள்’ அல்லது கல்லறை தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுச்சேரி முழுவதும் டோரியா பூக்கள் விற்பனை வேகமெடுத்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் மறைந்த உறவினர்களின் கல்லறைகளுக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்துவர். கல்லறை தோட்டங்களில் புல், கொடிகள் அகற்றப்பட்டு, சுண்ணாம்பு பூசி சுத்தம் செய்யப்படும். பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
அன்று காலை முதல் மாலை வரை கல்லறை தோட்டங்களுக்கு மக்கள் திரளாகச் செல்வார்கள். மாலை நேரத்தில் பங்கு தந்தையர்கள் புனித நீர் தெளித்து பிரார்த்தனை நடத்துவர். ஆலயங்களிலும் ஆன்மாக்களின் இளைப்பாறுதலுக்காக சிறப்பு திருப்பலிகள் நடைபெறும்.
இதனையொட்டி புதுச்சேரி சந்தைகளில் டோரியா பூக்களுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. பெங்களூர், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட இப்பூக்கள், ஒரு கட்டு ரூ.180-க்கு வாங்கப்பட்டு, ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. அழகான நிறம் மற்றும் மணம் கொண்ட இந்த டோரியா பூக்களை கிறிஸ்தவ மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
Summary :
With All Souls’ Day near, Doria flower demand rises in Puducherry. Christians prepare floral tributes for their departed loved ones.









