சிக்கன் 65 என்றாலே அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு பிரபலமான உணவு. அதிலும் பச்சை சிக்கன் 65 என்றால் சுவை மட்டுமல்ல, வாசனையிலும் வித்தியாசம்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கும் இந்த ரெசிப்பி வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்:
-
சீரகம் – 1 ஸ்பூன்
-
பச்சை மிளகாய் – 3
-
கொத்தமல்லி – 1 கைப்பிடி
-
புதினா – 1 கைப்பிடி
-
சிக்கன் – 1 கிலோ
-
தயிர் – 2 ஸ்பூன்
-
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
-
உப்பு – தேவையான அளவு
-
சோள மாவு – 3 ஸ்பூன்
-
எண்ணெய் – தேவையான அளவு
செய்வது எப்படி:
-
முதலில் மிக்ஸியில் சீரகம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்கவும்.
-
ஒரு பெரிய பாத்திரத்தில் சுத்தமாக கழுவிய சிக்கனை எடுத்து, தயிர் மற்றும் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து கலக்கவும்.
-
அதனுடன் அரைத்த கலவை, உப்பு, சோள மாவு சேர்த்து நன்றாக கலந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
-
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்.
வெளியில் வாங்கும் சுவையை விட நாவூறும் சுவையுடன் வீட்டிலேயே சுலபமாக பச்சை சிக்கன் 65 தயார்!
Summary :
Learn how to make Green Chicken 65 at home with simple ingredients and quick steps. A spicy, crispy, and flavorful delight for every food lover!








