Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல் ஆணையர் கோரிக்கை
Grindr செயலி என்பது லெஸ்பியன், கே, இருபால் மற்றும் திருநங்கை (LGBTQ+) சமூகத்தினருக்கான ஒரு சமூக வலைத்தள மற்றும் டேட்டிங் செயலியாகும்.
இது புவியியல் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு, பயனர்கள் அருகிலுள்ள மற்ற பயனர்களின் சுயவிவரங்களைக் காணவும், அவர்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவுகிறது.
தமிழகத்தில் போதை வஸ்துக்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. அதே வேளையில், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், Grindr எனும் அலைபேசிச் செயலியை தடை செய்யுமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், போதைப் பொருள் கடத்தல் குற்றங்களில் கைது செய்யப்படுபவர்களில் பத்து பேரில் ஐந்து பேர் இந்த குறிப்பிட்ட செயலியை உபயோகிப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Summary:
The Chennai City Police Commissioner has urged the Tamil Nadu government to ban the Grindr app, a social networking and dating platform for the LGBTQ+ community. This request stems from an investigation revealing that a significant portion (five out of ten) of those arrested for drug trafficking in Tamil Nadu have been using the application. The police believe the app is being exploited for illegal activities related to narcotics.