தமிழ் திரையுலகின் இளம் இசைப்புயலாகவும் திறமையான நடிகராகவும் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் ஜி.வி. பிரகாஷ் குமார். பின்னணிப் பாடகியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் சைந்தவி. இந்த திரையுலக ஜோடி கடந்த 2013-ம் ஆண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்தது. சுமார் 12 வருடங்கள் நீடித்த இவர்களது திருமண பந்தத்தில் அன்வி என்ற அழகான மகள் இருக்கிறார்.
இந்நிலையில், சில காலமாக கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாக கூறப்படும் நிலையில், இருவரும் பரஸ்பரமாக பிரிந்து செல்வது என முடிவெடுத்தனர். இதற்காக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை கூட்டாக தாக்கல் செய்தனர்.
இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல கோர்ட்டு நீதிபதி செல்வ சுந்தரி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜி.வி. பிரகாஷும் சைந்தவியும் நேரில் ஆஜராகி, நாங்கள் இருவரும் மனமொத்து பிரிகிறோம் என்று தெரிவித்தனர். இருவரின் சம்மதத்தையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஒத்திவைத்தார்.
திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இந்த முடிவு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்து விவகாரத்தில் நடிகை திவ்ய பாரதி தொடர்புபடுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள திவ்ய பாரதி, ஜி.வி. பிரகாஷின் குடும்ப விஷயத்தில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும், திருமணமான நபருடன் பழகும் எண்ணமே இல்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Summary:Tamil film industry’s popular music composer and actor G.V. Prakash Kumar and his wife, playback singer Saindhavi, have filed for divorce by mutual consent after 12 years of marriage. They appeared in court and confirmed their decision. Actress Divya Bharathi has denied any involvement in their separation following social media rumors.