You are currently viewing மாணவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் குஷி! தென்காசி, விழுப்புரம், குமரியில் இன்று உள்ளூர் விடுமுறை

மாணவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் குஷி! தென்காசி, விழுப்புரம், குமரியில் இன்று உள்ளூர் விடுமுறை

0
0

தமிழகத்தின் தென்காசி, விழுப்புரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (மார்ச் 4) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று செயல்படாது.

விழுப்புரம் – மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 15 (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி – அய்யா வைகுண்டசாமியின் 193வது அவதாரத் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கும் ஈடாக மார்ச் 15ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி – அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா (மார்ச் 4) மற்றும் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக் கொடை விழா (மார்ச் 11) ஆகியவற்றை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கிய அரசு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அரசு அலுவலகங்கள் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply