உடலில் மூளையில் 75 சதவீதம் நீர் சத்து , ரத்தம் 92 சதவீதம் ,
எலும்புகள் 22 சதவீதம்,தசைகளில்
75 சதவீதம் நீர் உள்ளது.ஒட்டுமொத்தமாக மனித உடலின் சீரான இயக்கத்திற்கு நீரே ஆதாரம்.

தினசரி எவ்வளவு நீர் குடிக்க வேண்டும்?
நாள் ஒன்றுக்கு நமது உடல் இயக்கத்திற்க்கு 2-2 1/2 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது என்பது மருத்துவ அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
8-10 கிளாஸ் அளவு என்று எளிதாய் புரிய வைக்கின்றனர். காபி , டீ , பழச்சாறுகள் இல்லாது முழுக்க முழுக்க வெறும் தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம்.
உடற்பயிற்சி, தட்ப வெப்பநிலை. கர்ப்பகாலம், தாய்பால் கொடுக்கும் காலம், நோய்வாய்பட்ட காலம் இவற்றில் கூடுதல் நீர் தேவைப்படும்.
தண்ணீர் குடிக்காவிட்டால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் :
போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு , மிகவும் சோர்ந்து போவார்கள். அதிலும் கோடைக்காலத்தில் சராசரி அளவிற்கு அதிகமாகவே குடிக்க வேண்டும்.
உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் பொழுது சுவாசத்தில் மாற்றம் ஏற்படும். ஏனெனில் நீர்ச்சத்தினை உடலில்
தக்க வைக்க உடல் எடுக்கும் முயற்சி , ஆதலால் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படக் கூடும்.
நீர் சத்து உடலில் குறையும் போது நீர்ச்சத்தினை சேமிக்கும் நோக்கில் அதிக கொழுப்பு சத்தினை உருவாக்கும்.
உடலில் நீர் சத்து குறையும் பொழுது அதிக நச்சுப் பொருட்கள், ஆசிட் கழிவு ஆகியவற்றை உடல் வெளியேற்றாமல்
தேங்குவதால் கிருமிகள் தாக்குதல், உடல் நலிவு நாளடைவில் நோய் எதிர்ப்புச் குறைகிறது.
தண்ணீர் குடிக்காவிட்டால் அதிகம் பாதிப்படைவது சிறுநீரகம் தான். சிறுநீரகப்பையில் ஏற்படும் நோய்த்தொற்றுகள், நீர்க்கடுப்பு, வீக்கம், வலி ஏற்படும். நாட்பட்ட சிறுநீரக தொற்று சிறுநீரக செயல்பாட்டை குறைத்து சிறுநீரக செயலிழப்பு வரை ஏற்படும்.
- குடல் உடலில் உள்ள நீர் சத்தினை அதிகம் இழுக்கக் கூடியது. போதுமான அளவு தண்ணீர் குடிக்காத போது
கழிவுகள் காலதாமதாக பெருங்குடலுக்குச் செல்லும். அல்லது செல்லாது தேங்கி, கடினப்பட்டு இருக்கும். குடல் மலத்தில் உள்ள நீரைக் கூட நீர்ப்பற்றாக்குறையால் உறிஞ்சும் போது மலம் வறண்டு இறுகி மலச்சிக்கலை ஏற்படுத்தும். - மூட்டுகளுக்கு அதன் சீரான இயக்கத்திற்கு அதிக நீர் தேவை . உராய்வைத்தடுக்கும் உயவுப்பொருள் போல. நீர்ச்சத்து குறையும் பொழுது மூட்டுகள் பலவீனப்படும், மூட்டு கடினப்படுதல், மூட்டு வலி ஆகியவை ஏற்படும்.
- நீர்ச்சத்து குறையும் பொழுது செல்களுக்கு நீர் இல்லாததால் தாகம் எடுக்கும் பொழுது நீருக்கு பதிலாக அதிகம் உண்கின்றனர். இதனால் எடை கூடும். எனவே தான் எடைக்குறைப்பில் உள்ளவர்கள் நிறைய தண்ணீர் அதாவது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- தொடர்ந்து உடலில் நீர் குறைபாடு இருக்கும் பொழுது அனைத்து உறுப்புகளில் உள்ள செல்கள் வறண்டு போகும்.குறிப்பாக
சருமம் உட்பட சுருங்கத் தொடங்குகின்றன. அதனால் இளவயதிலேயே தோல் சுருக்கங்களால் முதுமை தோற்றம் பெறுவர். - ரத்தம் 92 சதவீதம் நீர் கொண்டது. நீர் குறையும் பொழுது ரத்தம் கடினப்பட்டு ரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகின்றது.
- நீர் குறைபாடு வயிற்றுப் புண், அமிலச் சுரப்பு ஆகியவற்றால் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
Summary :
Insufficient water intake harms kidneys, joints, skin, digestion, and blood flow. Experts recommend 2-2.5 liters of water daily for optimal health.









