Rain Warning அதிகபட்ச வெப்பநிலை 34-35°C ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27°C ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (07-10-2025), மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து அதே பகுதிகளில் நிலவியது.
இது இன்று (08-10-2025) காலை அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் கிழக்கு தென்கிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக அடுத்த 12 மணி நேரத்தில் மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வலுவிழக்க கூடும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று கனமழை:
இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, கரூர், திருப்பூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பம் குறையும்:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 12ம் தேதி அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி, இயல்பிலிருந்து சற்று குறைந்து இருக்கக்கூடும்.
சென்னையில் மிதமான மழை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
Summary:
Today, heavy rainfall is expected in 15 districts of Tamil Nadu. Chennai is likely to experience light to moderate rain showers during the afternoon. Residents are advised to stay prepared for wet weather conditions.