நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – பெரியார் பல்கலைக்கழக பதிவாளருக்கு ஹைகோர்ட் சம்மன்!

0571.jpg
0
0

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றால் மட்டுமே பதவி உயர்வு பட்டியலில் பெயர் சேர்க்க முடியும் என கடிதம் அனுப்பிய சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர், மார்ச் 7ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tardigrade or Water Bear

“வெப்பம், குளிர், பேரழிவுகளையும் வெல்லும் நீர்க்கரடி!”

சமீபத்திய செய்தி!!!

2013ல் தொடங்கிய வழக்கு – 2017ல் நீதிமன்ற உத்தரவு

2013ஆம் ஆண்டு, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவியாளர்களாக பணியாற்றிய குழந்தைவேல் உள்ளிட்டோர், பணி உயர்வு கோரி வழக்கு தொடர்ந்தனர். விசாரணையின் பின்னர், 2017ஆம் ஆண்டு நீதிமன்றம் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வும் அதற்கான பணப்பலன்களும் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், பல்கலைக்கழகம் இந்த உத்தரவை செயல்படுத்தாததால், குழந்தைவேல் உள்ளிட்டோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர்.

அழுத்தம் தரும் பதிவாளர் – நீதிமன்ற உத்தரவு!

இதன் நடுவில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றால் தான், பதவி உயர்வு பட்டியலில் பெயரை சேர்க்க முடியும் என பல்கலைக்கழக பதிவாளர் எழுத்துப்பூர்வமாக தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எந்த விதமான வற்புறுத்தலும் இல்லாமல் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என குழந்தைவேல் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மார்ச் 7ஆம் தேதி உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.