HMPV வைரஸ் என்ன?
மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) எனப்படும் ஒரு ஆர்என்ஏ வைரஸ், சீனாவில் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது முதன்மையாக இருமல், தும்மல் மூலம் பரவும் சுவாச நோய்க்கிருமியாகும். இந்த வைரஸ் முதன்முதலில் 2001 இல் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும்பாலும் இது லேசான தொற்றுகளை உருவாக்கும், ஆனால் சிறு குழந்தைகள், முதியவர்கள், மற்றும் குறைந்த நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் தீவிர பாதிக்கப்படக்கூடும்.
அறிகுறிகள்:
- இருமல்
- காய்ச்சல்
- மூக்கு ஒழுகுதல்
- மூக்கடைப்பு
- தொண்டை வலி
- மூச்சுத்திணறல்
- உடல் சொறி
சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை:
HMPV-க்கு உடனடி தடுப்பு மருந்துகள் கிடையாது. பெரும்பாலும் வீட்டு சிகிச்சைகள் மூலம் அறிகுறிகளை நிர்வகிக்க முடியும். ஆனால் நோயாளி கடுமையாக பாதிக்கப்பட்டால் மருத்துவ சிகிச்சை அவசியமாகும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் அடிக்கடி கழுவுங்கள்.
- இருமல் அல்லது தும்மல் செய்யும்போது மூக்கையும் வாயையும் மூடவும்.
- சுவாசத் தொற்றுடன் இருப்பவர்களைத் தவிர்க்கவும்.
- நோய்வாய்ப்பட்டால் முகமூடி அணியுங்கள்.
- முகம், கண்கள், மூக்கு, வாயைத் தொடுவதை தவிர்க்கவும்.
சீனாவின் தற்போதைய நிலைமை:
HMPV சீனாவில் பரவி வருவதால் சுகாதார அமைப்புகள் கவனம் செலுத்தி வருகின்றன. சீனா தொடக்கத்திலே தகவல்களை மறைத்ததாக கூறப்படுகிறது, இது கொரோனா பரவலின் போது உலகம் சந்தித்த சிக்கல்களை மீண்டும் நினைவூட்டுகிறது.
இந்தியாவில் விழிப்புணர்வு:
இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் HMPV வைரஸ் பரவல் குறித்து எச்சரிக்கையாக உள்ளது. தற்போது இந்தியாவில் வைரஸ் தாக்கம் குறிப்பிடத்தகுந்த அளவில் இல்லை, ஆனால் குளிர்காலங்களில் சுவாசத் தொற்றுகள் அதிகரிக்கக் கூடும் என்பதால், முன்னெச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் வசதிகள் தயார் நிலையில் உள்ளன.
முக்கிய அறிவுறுத்தல்:
உலக சுகாதார அமைப்புகள் மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்புகளின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். HMPV குறித்து அச்சப்படாமல், விழிப்புடன் செயல்படுவது முக்கியம்.