இதய துடிப்பை பேஸ்மேக்கர் கருவி எப்படி கணக்கிடுகிறது?

372.jpg

முதலில் இதயம் பற்றி அறிந்து கொள்ளலாம்…
இதயத்தை சுற்றியுள்ள உறை பெரிகார்டியம்.
இதயம் நிமிடத்துக்கு
72 முறை துடிக்கும்.

இதயத்தின் மேல் அறையின் பெயர் ஆரிக்கிள்.
இதயத்தின் கீழ் அறையின் பெயர் வெண்ட்ரிக்கிள்.
இதயத்தின் வலது அறைகளில் அசுத்தமான ரத்தம் உள்ளது.
இதயத்தின் இடது அறைகளில் சுத்தமான ரத்தம் உள்ளது.
இதயத்துக்கு ரத்தம் கொண்டு செல்பவை கரோனரி தமனிகள்.
இதயத் துடிப்பை அறிய உதவுவது ஸ்டெதஸ்கோப்.
இதய அறைகளுக்கு இடையே வால்வுகள் உள்ளன.
இதயம் நுரையீரல்களுக்கு பின்புறமாக அமைந்துள்ளது.
இதயமே நமது உடலின் ரத்தத்தை பம்ப் செய்து மற்ற உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது.
நுரையீரல் பகுதியில் ஆக்சிஜன் ஏற்றப்படும் ரத்தம், இதயத்தால் பம்ப் செய்யப்பட்டு மற்ற பாகங்களுக்கு அனுப்பி வைக்கிறது.
இதயத்தின் எடை :
உங்கள் கையை பொத்திக்கொண்டால் என்ன அளவு இருக்குமோ, இதயம் அந்த அளவுடையதாக இருக்கும்.
இதயம் சுமார் அரை கிலோ எடை கொண்டிருக்கும்.
இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவது மாரடைப்பை உருவாக்கும்.
இதயத்துடிப்பு உருவாக்கும் இடம் பேஸ்மேக்கர் எனப்படுகிறது.
இதேபெயரில் இதய சிகிச்சை கருவி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
பேஸ்மேக்கர் என்ன செய்யும்?
இருதய ஆபரேஷன் செய்து கொள்பவர்களில் சிலர் ‘பேஸ் மேக்கர்’ என்னும் கருவியை உடம்போடு பொருத்திக் கொள்கிறார்கள். இந்த பேஸ் மேக்கரின் வேலை என்ன தெரியுமா?
ஒரு மனிதனின் இருதயத் துடிப்பு சீராக இருக்க வேண்டும். ஆரோக்கியமான மனிதர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இதய நோயாளிகளின் இருதயத் துடிப்பு தினத்துக்கு தினம் மாறுபட்டுக் கொண்டிருக்கும்.
இதை சரி செய்ய கண்டுபிடிக்கப்பட்ட கருவியின் பெயர்தான் பேஸ் மேக்கர். இதனுடைய வேலை, ஒரு இதய நோயாளியின் இதயத் துடிப்பை சம்பந்தப்பட்ட நோயாளியின் உடல் நிலைக்கு ஏற்பதானே சரி செய்து கொண்டு கூடுதலாகவோ. குறைவாகவோ தானாகவே இயங்கும். பேஸ் மேக்கர் நிமிடத்துக்கு 60 முதல் 140 தடவைகள் நோயாளியின் இருதய நிலைமைக்கு ஏற்றவாறு துடிக்கும். இதன் காரணமாக நோயாளிகள் தங்களின் வழக்கமான பணிகளை சிரமம் இல்லாமல் செய்து வரலாம்.
பேஸ்மேக்கர்கள் இப்போது புதிது புதிதாய் வந்து கொண்டிருக்கின்றன.
சிறிய பேட்ட ரியில் இங்கு இந்த பேஸ் மேக்கரில் உள்ள மோட்டார் அதிர்வுகளை உண்டாக்கி இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கும் பணியைச் செய்கிறது.
இதய நோயாளி ஒருவருக்கு இந்த பேஸ் மேக்கர்கள் பொருத்தும் போதே அதில் உள்ள ‘#கம்ப்யூட்டர்_சிப்’பில் கீழ்கண்ட தகவல்கள் பதிவு செய்யப்
படுகின்றன.
1. இதய நோயளியின் இதயத் துடிப்பை ஒவ்வொரு நிமிடமும் கணக்கிட வேண்டும்.
2. இதயத் துடிப்புகள் கூடும்போதோ குறையும்போதோ அது பற்றிய தகவலை டாக்டருக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். (டாக்டரின் செல்போன் எண் மற்றும் ஆஸ்பத்திரி கம்யூட்டர் கட்டுப் பாட்டு அமைப்புக்கு தொடர்பு வசதி இந்த பேஸ் மேக்கரில் உண்டு.)
3. இதயத் துடிப்பில் ஏற்படும் மாற்றத்தை பேஸ்மேக்கர் கருவியே டாக்டரின் செல்போனுக்கு குறும் செய்தி  மூலம் தகவல் கொடுத்துவிடும். டாக்டர் அந்தத் தகவலைப் பெற்று போன் மூலம் அடுத்த ட்ரீட்மெண்ட் கொடுப்பார்.
இதயத்துடிப்பு குறைவாக இருப்பவர்கள் அல்லது இதயம் சீராக துடிக்கும் அளவிற்கு வலு குறைவாக இருப்பவர்களுக்கு பொதுவாக “பேஸ்மேக்கர்ஸ்” வைத்து, இதன் உதவியோடு இதயம் சீராக துடிக்க வைப்பார்கள்.
#எச்சரிக்கை!!!!!!!!
“பேஸ்மேக்கர்ஸ்” வைத்து இதயம் சீராக இயங்க ஆரம்பித்தாலும் கூட, “பேஸ்மேக்கர்ஸ்” வைத்தவர்கள் மற்றவர்கள் செய்யும் சில சாதாரண வேலைகளை செய்ய கூடாது, மற்றும் சில இடங்களுக்கு செல்ல கூடாது என்ற நிபந்தனைகள் இருக்கின்றன.
உங்கள் உடலில் இடது பக்கம் “பேஸ்மேக்கர்” வைத்திருந்தால், அதற்கு மருப்பக்கமான வலது பக்கத்தில் தான் மொபைல் பயன்படுத்த வேண்டும். மொபைல் அலைவரிசையினால் “பேஸ்மேக்கர்”-ன் செயல்பாடு பாதிக்கப்படலாம்.
அதிக மின்னழுத்தம் இடங்களுக்கு சென்றால், அது உங்கள் உடலில் பொருத்தப்பட்டிருக்கும் “பேஸ்மேக்கரை” பாதிக்கும். வீட்டில் உள்ள மிக்ஸி, மாவாட்டும் இயந்திரம் போன்றவற்றை உபயோகப்படுத்தக் கூடாது.
“பேஸ்மேக்கர்” வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய விஷயம் இது. மெட்டல் டிடக்டர்
 (Metal Dedactor) வழியே அவர்கள் செல்ல கூடாது, இது பேஸ்மேக்கரின் இயக்கத்தை செயலிழக்க செய்துவிடும்.
பேஸ்மேக்கர் வைத்திருப்பவர்கள்
x-ray,
CT Scan,
Ultra Sound,
Echocardiogram
போன்ற பரிசோதனைகள் பாதுகாப்பாக தயக்கமின்றி எடுத்துக்கொள்ளலாம். ஆனால், MRI மட்டும் கூடாது என்று கூறப்படுகிறது. ஏனெனில், MRI பேஸ்மேக்கரின் Circuit-ஐ பாதித்துவிடும் என்று கூறுகிறார்கள். எனவே, மருத்துவர் ஆலோசனையுடன் MRI செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
புற்றுநோய் உள்ளவர்களுக்கு கதிர்வீச்சு
(Radiation Therapy) வழங்கப்படுவது வழக்கம். அனால், பேஸ்மேக்கர் வைத்துள்ளவர்கள் நேரடியாக கதிர்வீச்சு சிகிச்சைகளில் ஈடுபடக் கூடாது. கதிர்சீச்சு பேஸ்மேக்கரை பாதிக்கும்.
பேஸ்மேக்கரில், திறன் மற்றும் செயல்பாடு குறித்து நிறைய வகைகள் இருக்கிறது. சில பேஸ்மேக்கர் வைத்தல், இதயத்துடிப்பை மட்டும் தான் இயக்க முடியுமே தவிர இயல்பாக நடக்க கூட முடியாது. சிலவன, மாடிப்படி ஏறி இறங்கும் வகையில் இயங்க உதவும். எல்லாம் பணம் பொறுத்து தான் இருக்கிறது.
மின்னணு உபகரணங்கள் பயன்படுத்துவதில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டியது முக்கியம். முடிந்த வரை மின்னணு உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளலாம்.

Summary :

Pacemakers track and regulate heartbeat, send alerts to doctors, and help patients maintain stable heart function, though specific safety precautions are required.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *