இந்திய அணிக்கு அதிர்ச்சி தோல்வி – முடிவுக்கு வந்த சிவம் துபேவின் 2151 நாள் சாதனை!

0095.jpg

மெல்போர்ன்: அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம், 2151 நாட்களாக நீடித்த சிவம் துபேவின் உலக சாதனை முடிவுக்கு வந்துள்ளது.

மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 125 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. அபிஷேக் சர்மா 68 ஓட்டங்களும், ஹர்ஷித் ரானா 35 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடவில்லை.

126 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி, 13.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்த தோல்வியால் சிவம் துபேவின் 2151 நாட்கள் நீடித்த உலக சாதனை முறியடைந்தது. 2019 டிசம்பரில் நடந்த மேற்கிந்திய தீவுகள் போட்டிக்குப் பிறகு துபே கலந்து கொண்ட 37 டி20 போட்டிகளில் இந்தியா தோல்வியறியாது இருந்தது. அதில் 34 வெற்றியும், 3 முடிவில்லா போட்டிகளும் இருந்தன.

இதேபோல் பும்ரா கலந்து கொண்ட 24 டி20 போட்டிகளிலும் இந்தியா தோல்வியறியாமல் இருந்தது. இப்போட்டியின் தோல்வியால் இருவரின் சாதனைகளும் முடிவுக்கு வந்துள்ளன.

சாதனை ரீதியாக, தொடர்ச்சியாக தோல்வியறியாமல் அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலில், 37 போட்டிகளுடன் சிவம் துபே முதலிடத்தில், 27 போட்டிகளுடன் உகாண்டாவின் பாஸ்கல் முருங்கி இரண்டாம் இடத்தில், 24 போட்டிகளுடன் பும்ரா மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

Summary :
India’s 4-wicket loss to Australia ends Shivam Dube’s 2151-day unbeaten T20 streak. India managed only 125 runs; Australia chased easily.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *