இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தலைவர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா ஊடகங்களிடம் பேசியபோது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரி அதிகபட்ச வெப்பநிலையை விட வெப்பம் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார். மேலும், பல இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையும் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும்.
இருப்பினும், மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை வழக்கம்போல் இருக்கும். ஏப்ரல் முதல் ஜூன் வரை, வடக்கு, கிழக்கு, மத்திய இந்தியா மற்றும் வடமேற்கு சமவெளிகளில் வழக்கத்தை விட 2 முதல் 4 நாட்கள் வரை வெப்ப அலை நீடிக்கும்.
வழக்கமாக, ஏப்ரல் முதல் ஜூன் வரை இந்தியாவில் 4 முதல் 7 நாட்கள் வரை வெப்ப அலை இருக்கும். ஆனால் இந்த முறை வெப்ப அலை நீடிக்கும் நாட்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Summary : The head of the India Meteorological Department (IMD), Mrutyunjay Mohapatra, has stated that most parts of India will experience higher than average maximum temperatures, with minimum temperatures also being above normal in many places. Northwest and central India are likely to see 2 to 4 more heatwave days than usual between April and June.