கனடாவின் எட்மண்டன் நகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இது. இந்திய வம்சாவளியினரான அர்வி சிங் சாகூ (55) தனது காதலியுடன் அக்டோபர் 19ஆம் தேதி ஒரு உணவகத்துக்கு சென்றிருந்தார்.

உணவகத்திலிருந்து வெளியேறி தன் கார் நிறுத்திய இடத்துக்குச் சென்ற சாகூ, தனது காரின் மீது ஒருவர் சிறுநீர் கழிப்பதை கண்டார். அதற்கு அவர் தட்டிக்கேட்டபோது, “என்ன வேண்டுமானாலும் செய்வேன்” என கூறிய அந்த நபர் திடீரென சாகூவின் தலையில் தாக்கியுள்ளார்.
இதனால் சாகூ மயங்கி விழ, அவரின் காதலி உடனே அவசர உதவியை அழைத்தார். ஆனால் சாகூ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஐந்து நாட்கள் கழித்து உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்குப் பொறுப்பான கனேடியர் கைல் பாபின் (40) கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் தாக்குதல் வழக்காக இருந்தது, சாகூ உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. அவர் நவம்பர் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
Summary :
An Indian-origin man in Canada was killed after confronting a local who urinated on his car. The attacker has been arrested and charged with murder.








