அமெரிக்காவில் 2029 ஆம் ஆண்டு வரை இந்தியர்கள் க்ரீன் கார்டு பெற முடியாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்றதிலிருந்து, வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை பெறும் நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, க்ரீன் கார்டு வழங்கும் விதிமுறைகளும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளன.
க்ரீன் கார்டுக்காக விண்ணப்பிப்பவர்கள், அமெரிக்காவின் அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் குறித்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தகவலின்படி, கடந்த 5 ஆண்டுகளில் 50,000 பேருக்கும் மேல் அமெரிக்காவுக்கு குடியேறிய நாடுகளுக்கு க்ரீன் கார்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, இந்தியர்கள் 2029 வரை க்ரீன் கார்டு பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து 25,000க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவுக்கு குடியேறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவால், க்ரீன் கார்டு வழி அமெரிக்கா செல்லும் வாய்ப்பு தடைபட்ட நிலையில், பிற விசா வகைகளின் மூலம் மட்டுமே இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் செல்லும் நிலை தொடர்கிறது.
Summary :
Indians face a Green Card freeze till 2029 as the US limits immigration from countries with high migration in recent years.








