உலகம் முழுவதும் சுற்றுலா தளங்களை அழகாகப் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் மற்றும் புகைப்படக் கலைஞர் அனுநய் சூத் (Anunay Sood) 32 வயதில் திடீரென மரணமடைந்தார்.

அவரது குடும்பத்தினர் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் பிரபலமான அனுநய்க்கு 1.4 மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட யூடியூப் சப்ஸ்கிரைபர்களும் இருந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பே அவர் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது. சுற்றுலா இடங்களை அழகாக படம்பிடித்து காட்டுவதில் வல்லவராக இருந்த அவர் திடீரென காலமானது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. குடும்பத்தினர், “இக்கடினமான நேரத்தில் எங்களுக்கு தனிமை தேவை, யாரும் வர வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், லாஸ் வேகாஸ் போலீசார் விரைவில் அனுநய் சூத் மரணத்திற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary :
Popular travel influencer Anunay Sood, aged 32, dies suddenly. His final Las Vegas post goes viral as fans mourn the shocking loss.








