Intermittent என்றால் சீரற்ற என்று பொருள். அதாவது இந்த விரதத்தின் சிறப்பு விரதம் இருப்பதற்க்கான நேரத்தை மாற்றி உடலுக்கு எதிர்பாராத அழுத்தம் தரும் வகையில் செய்வது intermittent fasting ஆகும்.
இந்த விரதத்தில் உணவு உண்ணும் நேரம் மாறுபடும். அதாவது
8 : 16, 4:20, 12:12 என்ற உணவு இடைவெளியில் உணவு உண்பார்கள்.இதனை எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அதாவது 8 மணி நேரத்திற்குள் சாப்பிட்டு முடித்து விட வேண்டும். பிறகு 16 மணி நேரம் ஒன்றும் சாப்பிட கூடாது.

உதாரணமாக 1: 23 என்ற வகையில் இரவு 7 முதல் எட்டு மணிக்குள் மட்டும் சாப்பிட்டு மீதி 23 மணி நேரம் ஒன்றும் சாப்பிடாமல் இருப்பது, நார்மலாக வாரத்திற்கு இரு நாட்கள் மட்டும் இப்படி செய்ய சொல்வார்கள்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, முதலில் சாப்பிட்டு விட்டு பிறகு பட்டினி கிடக்க வேண்டும். மாற்றி செய்ய கூடாது. உதாரணமாக நாளை பகல் முழுவதும் சாப்பிட கூடாது என்று முடிவு எடுத்து விட்டால் இன்று இரவு 7 to 8க்குள் நன்றாக சாப்பிட வேண்டும்.
இந்த விரதத்தில் அல்சர் வருமா?
சாதாரணமாக மக்களுக்கு வரும் இரண்டு சந்தேகங்கள் .
1. அல்சர் வருமா?
2. லோ சுகர் வருமா?
3.காலை உணவு மூளைக்கு மிக முக்கியம் தவிர்க்கலாமா?
இதற்கு தீர்வாக உணவை தேர்ந்தெடுத்து உண்பதில் உள்ளது.
மாவு சத்து பொருட்கள் மற்றும் சர்க்கரையை கூடுமான அளவு குறைத்துக்கொண்டு கொழுப்பை அதிகமாக்கி சாப்பிட்டால் இப்படி வயிறு புண் வராது.
வயிற்றில் உள்ள HCL அமிலம்தான் அல்சர் வர காரணம் என்று நம்பப்படுகிறது. வயிற்றில் அமிலம் இருப்பதால் புண் ஏற்பட்டுவிடும் என்பது லாஜிக். ஆனால் அறிவியல் சொல்வது நடப்பதில்லை. நடப்பதை அறிவியல் விளக்குகிறது.வெறும் தர்க்க கணக்கில் எல்லாவற்றையும் விளக்க முடியாத அளவு இயற்கை சிக்கலானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
வாரியர் டயட் :
இப்படி 23:1 முறையில் சாப்பிடுவதை வாரியர் டயட் என்றும் சொல்வார்கள்.
இப்படி சாப்பிடுவதன் மூலம், உடலில் inflammation (உள் காயங்கள்) ஏற்படுத்தும் பொருட்கள் எல்லாம் வெளியேற்றப்படுகின்றன. மூளையின் விழிப்பு நிலை அதிகரிக்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் மிதமான எக்சர்சைஸ் செய்தால், உடல் வலு அதிகரிக்கிறது. கொழுப்பு எரிந்து தசை வலுவாகிறது.
எப்படி உடலை இந்த விரத முறைக்கு பழக்குவது?
ஆரம்பத்தில் காலை 9 மணி மற்றும் இரவு 7 மணிக்கு சாப்பிடுங்கள். பிறகு மெல்ல மெல்ல காலை உணவு நேரத்தை தள்ளிக்கொண்டு வாருங்கள்.
உங்களுக்கு டயபட்டிஸ் இருந்தால் அதை கட்டுப்படுத்திய பின்னரே இதை செய்ய வேண்டும்.
அபாயகரமான அளவு லோ சுகர் ஏற்படும் எனவே எச்சரிக்கையுடன் முடிந்தால் மருத்துவர் ஆலோசனைப்படி செயல்படுங்கள்.
மாத்திரை மருந்துகள் சாப்பிடும் காலங்களில் இதை செய்ய கூடாது.
Summary :
Intermittent fasting involves timed eating windows that may improve metabolism and reduce inflammation, but requires caution for diabetics and medication users.








