மஹிந்திரா XUV700 எபோனி அறிமுகம்: புதிய அம்சங்கள் இங்கே

Mahindra XUV700 Ebony

மகிந்திரா நிறுவனம் XUV700 காரின் புதிய எபோனி எடிஷனை ரூ. 19.64 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உயர் ரக மாடலின் விலை ரூ. 24.14 லட்சம் (இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலை).

பெயர் குறிப்பிடுவது போல, இந்த XUV700 முழுமையான கருப்பு நிற வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. எபோனி எடிஷன் டாப்-ஸ்பெக் AX7 மற்றும் AX7 L வேரியண்ட்களை அடிப்படையாகக் கொண்டது.

மஹிந்திரா XUV700 எபோனி:

வெளிப்புறம் புதிய XUV700 எபோனி எடிஷன் வாடிக்கையாளர்களின் கருத்துகளின் விளைவாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாகவே வழக்கமான முழு கருப்பு வண்ணப்பூச்சுத் திட்டத்திற்குப் பதிலாக கருப்பு மற்றும் வெள்ளி நிறங்களின் கலவையிலான தோற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்திரா கூறுகிறது.

ஸ்டெல்த் கருப்பு வெளிப்புறம், பிரஷ் செய்யப்பட்ட வெள்ளி நிற ஸ்கிட் பிளேட்கள், கருப்பு நிற கிரில் இன்செர்ட்கள் மற்றும் கருப்பு நிற ORVMகள் என தனித்துவமான முன் பக்க வடிவமைப்பைக் கொண்டுள்ளது புதிய எபோனி எடிஷன்.

மேலும், 18-இன்ச் கருப்பு நிற அலாய் வீல்கள் இந்த எஸ்யூவி-க்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கின்றன. முன் ஃபெண்டர்கள் மற்றும் டெயில்கேட்டில் உள்ள எபோனி பேட்ஜ்கள் இதன் அடையாளத்தை தெளிவாக உணர்த்துகின்றன.

இந்த புதிய எடிஷன் மூலம், XUV700 இப்போது மொத்தம் எட்டு ஒருநிற (monotone) மற்றும் ஐந்து இருநிற (dual-tone) வெளிப்புற வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

மஹிந்திரா XUV700 எபோனி:

மஹிந்திரா XUV700 எபோனி: அம்சங்கள் XUV700 எபோனி எடிஷன் டாப்-ஸ்பெக் AX7 மற்றும் AX7 L வேரியண்ட்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், 6-வே பவர்டு டிரைவர் சீட் (மெமரி ஃபங்ஷனுடன்), ஆட்டோ ஹெட்லைட்கள் மற்றும் வைப்பர்கள், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 12-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் பின்புற எல்இடி சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற அனைத்து மேம்பட்ட வசதிகளையும் கொண்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *