பாரிஸ்:
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முடிவை எடுக்கத் தயாராகி வருகிறது.

இதன்படி, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இருந்து பெண்கள் பிரிவில் திருநங்கை வீராங்கனைகள் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவியல் ஆய்வில், ஆணாகப் பிறந்தவர்களுக்கு இயல்பாக உள்ள உடல் வலிமை மற்றும் ஆற்றல், பாலின மாற்று ஹார்மோன் சிகிச்சைகளுக்குப் பிறகும் குறைவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு, “பெண்கள் பிரிவைப் பாதுகாக்க வேண்டும்” என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், IOC தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் மற்றும் சீன தைபேயின் லின் யூ-டிங் ஆகியோர் தங்கம் வென்றது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதுவே தற்போதைய தடை முடிவுக்கு வழிவகுத்த முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த முடிவை சிலர் வரவேற்று, பெண்கள் விளையாட்டுக்கு இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை எனக் கூறுகின்றனர். அதே நேரத்தில், IOC-யின் உள்பகுதியில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதிய விதி அமலுக்கு வந்தால், ஹார்மோன் சிகிச்சை காரணமாக சில வீராங்கனைகள் பங்கேற்க முடியாத நிலை உருவாகும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இத்தடை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் எனவும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் முழுமையாக அமல்படுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முடிவு, உலக விளையாட்டு துறையில் பெரிய விவாதங்களையும் மாற்றங்களையும் உருவாக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
Summary :
IOC plans to ban transgender women from female Olympic events starting 2028 after Paris 2024 debates on fairness and athlete advantage.








