அமெரிக்க பொருட்களுக்கு வரி ரத்து! – இஸ்ரேல்

Israel Eliminates Goods Tax of USA

அமெரிக்க பொருட்களுக்கான அனைத்து இறக்குமதி வரிகளும் ரத்து: இஸ்ரேல் முடிவு

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், உலக நாடுகளை அதிர வைக்கும் வகையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

கனடா,
மெக்சிகோ,
சீனா
ஏற்கனவே கூடுதல் வரிகளை விதித்திருந்த நிலையில், தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிப்பை சுதந்திர தினத்தன்று அறிவிக்கவுள்ளது.

டிரம்ப் அரசு – இந்த புதிய வரி முறை இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தயாரிப்புகளுக்கான வரிக் குறைப்பு விவகாரத்தில் டிரம்ப் கருத்து தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் கார்களுக்கு வரிகளை குறைத்ததாகவும், இந்தியாவும் விரைவில் பெரிய அளவில் குறைக்கவுள்ளதாகவும் கேள்விப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் அமெரிக்கா மீது விதித்த வரிகளை குறைத்ததாக செய்திகள் வெளியான சூழலில், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேல், யாரும் எதிர்பாராத விதமாக அமெரிக்க தயாரிப்புகள் மீதான அனைத்து சுங்க வரிகளையும் ரத்து செய்து அமெரிக்காவை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *