மத்திய கிழக்கில் இஸ்ரேல்–ஹமாஸ் இடையே ஏற்பட்டிருந்த போர் நிறுத்தம் மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளது. காசா பகுதியில் ஹமாஸ் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல், புதிய ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

டிரம்ப் தலைமையில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தின் கீழ் கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடலை ஒப்படைக்க ஹமாஸ் சம்மதித்திருந்தது. ஆனால், ஏற்கனவே ஒப்படைக்கப்பட்ட ஒருவரின் உடல்பாகங்களையே மீண்டும் கொடுத்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இதன் பின்னணியில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியது” என கூறி காசா மீது தாக்குதலை நடத்த உத்தரவிட்டார்.
ரஃபா நகரில் இஸ்ரேல் படைகள் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் இராணுவம் காசா நகரில் கடுமையான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் குறைந்தது 20 பொதுமக்கள் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்க துணை அதிபர் வேன்ஸ், “இது சிறிய மோதல் மட்டுமே; போர் நிறுத்தம் தொடரும்” எனக் கூறியுள்ளார். ஆனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
Summary :
After accusing Hamas of breaking the ceasefire and deceiving Netanyahu, Israel launched fresh airstrikes in Gaza, reigniting regional tensions.








