ராஜஸ்தானில் 9 வயது சிறுமி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0201.jpg

ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4வது மாடியில் இருந்து குதித்து 9 வயது அமய்ரா என்ற சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நவம்பர் 1 ஆம் தேதி இடம்பெற்றது. இதனால் பள்ளி மற்றும் உள்ளூர் சமூகத்தில் துயரம் பரவியுள்ளது.

அமய்ராவின் தாய் ஷிவானி கூறியதாவது – “என் மகளை பள்ளியில் சில மாணவர்கள் தொடர்ந்து கேலி செய்தனர். இதைப்பற்றி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தான் என் மகள் இப்படிச் செய்தாள்,” என குற்றம் சாட்டினார்.

சம்பவத்தன்று, அமய்ரா தனது மீதான கொடுமையைப் பற்றி ஆசிரியரிடம் புகார் அளித்தது CCTV காட்சிகளில் பதிவாகியுள்ளது.

மேலும், அமய்ராவின் மாமா கூறியதாவது – “அமய்ரா அந்த நாளில் இரண்டு முறை ஆசிரியரிடம் புகார் செய்தது உறுதி. ஆனால் ஆசிரியர் ‘போய் அமரு’ என்று கூறி அலட்சியமாக நடந்துகொண்டார்,” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் மீது FIR பதிவு செய்யப்பட்டு, கொடுமைப்படுத்தல் குற்றச்சாட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பெற்றோர் சங்கம், “பள்ளி நிர்வாகம் சம்பவத்தின் ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்கிறது,” என குற்றம்சாட்டி, நியாயமான விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

Summary :
A 9-year-old Jaipur student died after jumping from her school’s 4th floor. Parents allege bullying and negligence; FIR filed against the school.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *