மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. நவம்பர் 15-ஆம் தேதியுடன் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்கள் நிறைவடைகின்றன. இதுவே ரூ.1000 உரிமைத் தொகை பெறுவதற்கான கடைசி வாய்ப்பு என அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய இத்திட்டத்திற்காக, மாநிலம் முழுவதும் நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 44 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் – ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கைபேசி எண், வங்கி பாஸ்புக் ஆகிய ஐந்து ஆவணங்கள் மட்டுமே. முகாம்களில் விண்ணப்பம் அளித்தவுடன், சுமார் 10 நிமிடங்களில் பரிசீலனை முடிவடைகிறது என்பதால் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்க்கலாம்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “இதுவே கடைசி வாய்ப்பு; தகுதியுள்ள அனைவரும் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும். பொருளாதார சிக்கல்களும் இருந்தாலும், உரிமைத் தொகை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அரசு தரப்பில் கிடைத்த தகவலின்படி, இந்தத் திட்டம் மூலம் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1.73 லட்சம் பெண்கள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர்.
Summary :
Apply before Nov 15 for Kalaignar ₹1000 Magalir Urimai Scheme. ‘Ungaludan Stalin’ camps end soon. Last chance for eligible women to register.








