கமல்ஹாசன் பெண் குரலில் பாடி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான பாடல்கள் பற்றி தெரியுமா?
கமல்ஹாசன் பெண் குரலில் பாடிய பாடல்கள்: திரையுலகிற்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான்.
அவர் நடிப்பில் மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், இயக்குனர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் எனப் பல திறமைகளை ஒருங்கே கொண்ட கலைஞனாகத் திகழ்கிறார்.
சமீபத்தில் கூட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்துகொள்ள அவர் அமெரிக்கா சென்றிருந்தார். 70 வயதை கடந்த பின்னரும் அவரது கலை ஆர்வமும் தாகமும் சிறிதும் குறையவில்லை என்பது வியப்பிற்குரியது.
நடிப்பைத் தாண்டி, அவ்வப்போது தனது தனித்துவமான குரலில் பாடல்களைப் பாடுவதிலும் கமல்ஹாசன் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ளார்.
குரலை மாற்றிப் பாடுவதில் வல்லவரான கமல்ஹாசன், முதன்முதலில் பெண் குரலில் பாடியது ‘அவ்வை சண்முகி’ திரைப்படத்தில்தான். 1996-ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.
படத்தின் அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘ருக்கு ருக்கு’ என்ற பாடலை பின்னணிப் பாடகி சுஜாதா மோகனுடன் இணைந்து பாடியிருந்தார் கமல்ஹாசன்.
வியப்பான விஷயம் என்னவென்றால், குரலை மாற்றியபோதும், பாடல் சுத்தத்திலிருந்து சிறிதும் விலகாமல் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண் குரலில் பாடுவதிலும் தான் ஒரு கில்லாடி என்பதை கமல்ஹாசன் இந்தப் பாடலின் மூலம் நிரூபித்தார்.
கமல்ஹாசன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் பெண் குரலில் பாடியுள்ளார். அதேபோல், தசாவதாரம் படத்தில் மூதாட்டி குரலில் “முகுந்தா முகுந்தா” பாடலின் சில வரிகளை பாடியுள்ளார். இந்த இரு படங்களையும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார்.
Summary : Kamal Haasan has sung in a female voice for popular Tamil films, most famously for “Rukku Rukku” in “Avvai Shanmughi,” where he sang a duet with a female singer. He also used a female voice in “Apoorva Sagodharargal” and a grandmother’s voice in parts of “Dasavatharam.”