தீபாவளி பலகாரம் பதிவு 3 – வடக்கில் கலக்கும் காஷ்மீர் கசார்.!

mir-kasaar.png

கண்ணுக்கு விருந்தளிக்கும் இயற்கை எழிலுக்கு மட்டுமல்ல ,நாவுக்கு விருத்தளிக்கும் இனிப்புகளில் காஷ்மீர் கசார் (Kashmir Kasar) ஒன்றாகும். இது சுவையிலும் மணத்திலும் தனித்துவம் வாய்ந்த ஒரு பாரம்பரிய இனிப்பு.

காஷ்மீரிகளின் சமையலில் முந்திரி,பாதாம்,ட்ரை ஃ ப்ரூட்ஸ் , சாஃப்ரான் (குங்குமப்பூ), உள்ளிட்டவை பிரபலமாக இருக்கிறது .

காஷ்மீர் பெண்களின் அழகு ரகசியம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். அங்கே திருவிழாக்கள், பூஜைகளின்போது பிரசாதமாக வழங்கப்படும் இனிப்பு வகைகளில் ஒன்றுதான் கசார்.

இந்த இனிப்பு, குளிர் காலத்தில் உடலை சூடாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஒவ்வொரு கரண்டியிலும் காஷ்மீரின் பாரம்பரியம், நறுமணம், இனிப்பு ருசி கலந்து இருக்கும்.

தேவையான பொருட்கள் :

  • கோதுமை மாவு   -1/4 கிலோ

  • ரவை -50 கிராம்

  • சக்கரை -125 கிராம்

  • நெய் – 1 டேபிள்ஸ்பூன்

  • தேங்காய்த்துண்டுகள் – அரை கப்

  • பாதாம் ,முந்திரி ,உலர் திராட்சை – 1 கப்

  • ஏலக்காய் -4

  • எலுமிச்சைச் சாறு -கால் கப்

  • நறுக்கிய பழங்கள் -உங்கள் விருப்பம் போல் .

செய்முறை :

வாணலியை அடுப்பில் ஏற்றி நெய் விட்டு சூடாக்குங்கள் .அதில் கோதுமை மாவு,ரவையைப் போட்டு
பொன்னிறமாக வரும் வரை வறுத்தெடுங்கள்.

பின்னர் அடுப்பை அணைத்து இதனைக் குறிரவிடுங்கள். வாழைப்பழம் ,ஆப்பிள் ,ஆரஞ்சு ,கொய்யா போன்ற பழங்களை சுமார் 1/4 கிலோ அளவில் எடுத்து கொள்ளுங்கள்.

பின்பு பழங்களை மிக சிறிய துண்டுகளாக நறுக்குங்கள். அதில் எலுமிச்சை ச்சாறு பிழிந்து கலக்கி ,ஓரமாக வைத்துவிடுங்கள்.

இதைப் போல் பாதாம் ,முந்திரி ,உலர் திராட்சை ஆகியவற்றையும் பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

இதற்குள் மாவு நன்கு குளிர்ந்துக்கும்.அதில் சக்கரைப்பொடியை போட்டுக் கிளறுங்கள்.நறுக்கிய பழங்கள் , பாதாம் ,முந்திரி ,உலர் திராட்சை,தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த் தூள் போட்டுக் கலக்கி ..

அப்படியே தூளாகக் கையிலோ கரண்டியிலோ அள்ளிப் பரிமாறுங்கள்.

Summary:

Kashmir Kasaar is a traditional North Indian sweet known for its rich aroma and royal taste. Made with saffron, ghee, jaggery, and dry fruits, it brings warmth and sweetness to every occasion. This delicacy reflects the soulful culture of Kashmir through its flavor and fragrance. A perfect blend of tradition, taste, and timeless charm.

 

 

 

 

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *