சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்.ஆர்.ஹெச்) தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை உரிமையாளரான காவ்யா மாறன், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மிகவும் அடையாளம் காணக்கூடிய முகங்களில் ஒருவராக மாறியுள்ளார்.
1992 ஆகஸ்ட் 6 ஆம் தேதி சென்னையில் பிறந்த காவ்யா மாறன், மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்திற்கு பெயர் பெற்ற செல்வாக்கு மிக்க மாறன் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அவரது தந்தை கலாநிதி மாறன், இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான சன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார். ஃபோர்ப்ஸ் (Forbes)படி, அவரது நிகர மதிப்பு $2.3 பில்லியன் என்று கூறப்படுகிறது.
அவரது தாயார் காவேரி மாறன் சன் டிவி நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார் மற்றும் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.
வணிகத்தைத் தவிர, அவரது குடும்பத்திற்கு வலுவான அரசியல் இருப்பும் உள்ளது, அவரது மாமா தயாநிதி மாறன் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சியில் தீவிர தலைவராக இருக்கிறார்.