You are currently viewing ஒரு வார்த்தைக்கு 75 லட்சமா? கீயானு ரீவ்ஸ் சம்பளம்!

ஒரு வார்த்தைக்கு 75 லட்சமா? கீயானு ரீவ்ஸ் சம்பளம்!

0
0

டப்பிங் பேச ஒவ்வொரு வார்த்தைக்கும் ரூ.75 லட்சம் வாங்கும் ஹாலிவுட் நடிகர்

லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த 60 வயதான பிரபல ஹாலிவுட் நடிகர் கீயானு சார்லஸ் ரீவ்ஸ், ‘தி மேட்ரிக்ஸ்’ மற்றும் ‘ஜான் விக்’ திரைப்படத் தொடர்களின் மூலம் உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர்.

குறிப்பாக ‘தி மேட்ரிக்ஸ் 2’ திரைப்படத்தில் ‘நியோ’ கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், மொத்தம் 638 வார்த்தைகள் பேசியதற்காக சுமார் 450 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் சுமார் 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாம்! இந்தத் திரைப்படம் உலக அளவில் 3,000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், கீயானு ரீவ்ஸ் இதுவரை ‘ஜான் விக்’ திரைப்படங்களின் நான்கு பாகங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜான் விக் 4’ திரைப்படம் உலக அளவில் 3,674 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது.

தற்போது அவர் ‘ஜான் விக்’ திரைப்படத்தின் ஐந்தாவது பாகத்தில் நடித்து வருகிறார்.

Summary :Rumors claim Keanu Reeves earned an astounding amount, possibly ₹75 lakh per word, for ‘The Matrix Reloaded,’ leading to a total salary of ₹450 crore for his 638 lines. This is discussed alongside the massive global box office success of both the ‘Matrix’ trilogy and the ‘John Wick’ franchise, with ‘John Wick: Chapter 4’ alone earning ₹3,674 crore. While the per-word figure is likely inflated, Reeves’s significant earnings and the popularity of his films are undeniable, and he is currently filming ‘John Wick 5’.

Leave a Reply