கேரளாவில் SIR (Special Intensive Revision) பணிச்சுமை காரணமாக ஒரு பள்ளி ஊழியர் உயிரை மாய்த்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனீஷ் ஜார்ஜ் (44) என்பவர் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) ஆக SIR பணிகளில் ஈடுபட்டு வந்தார். தொடர்ச்சியான பணி அழுத்தம், அதிக நேரம் வேலை செய்வது மற்றும் பணிகளை முடிக்க ஏற்பட்ட கட்டாயம் ஆகிய காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தற்கொலையென சந்தேகிக்கப்படும் இந்த மரணத்திற்கான விரிவான அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேநேரத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் குழுவாகவே பணிகளை மேற்கொள்வதால், மிகைப்படுத்தப்பட்ட அழுத்தம் குறித்த புகார்கள் இதுவரை பெறப்படவில்லை என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானிலும் BLO உயிரிழப்பு


இதற்கிடையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் BLO ஆக பணியாற்றிய அரசு ஆசிரியர் முகேஷ் குமார் (36) என்பவரும் உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது சட்டைப்பையில் ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கும் விசாரணை நடைபெற்று வருகிறது.
SUMMARY :
BLOs in Kerala and Rajasthan reportedly died due to SIR workload stress, triggering questions over pressure faced during voter list revision work.








