சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதற்கான முக்கிய அறிகுறிகள் – கவனமாக இருங்கள்!

0024.jpg

சிறுநீரகம் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக இருந்து, கழிவுகளை வெளியேற்றுவது, திரவ சமநிலையை பராமரிப்பது, மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற முக்கிய செயல்பாடுகளை செய்து வருகிறது. ஆனால், அது சரியாக செயல்படாமல் போனால், உடலில் பல எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றும். உலகளவில், சுமார் 14% மக்களுக்கு சிறுநீரக தொடர்பான பிரச்சனைகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் காணப்படும் சில முக்கிய அறிகுறிகளை பற்றி தெரிந்து கொண்டு, அவற்றை அவசரமாக கவனிப்பது மிக அவசியம்.

சிறுநீரக கோளாறுகளை அடையாளம் காட்டும் அறிகுறிகள்

வறண்ட மற்றும் அரிக்கும் தோல்
சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போனால், உடலில் கழிவுப் பொருட்கள் தேங்கி, சருமம் வறண்டு அரிக்கத் தொடங்கும். இது தாது மற்றும் எலும்பு கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்
வழக்கத்தை விட சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், சிறுநீரக செயலிழப்பு அல்லது தொற்று இருக்கலாம்.

கண்கள் மற்றும் முகத்தில் வீக்கம்
தூக்கம் போதுமான அளவில் இருந்தாலும் கண்கள் வீங்கியிருந்தால், சிறுநீரகங்கள் உடலில் புரதத்தை தக்கவைக்க முடியாமல் சிறுநீரில் வெளியேற்றுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

தசைப்பிடிப்பு மற்றும் தசை வலி
சிறுநீரகங்கள் கால்சியம், பொட்டாசியம், மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை ஒழுங்குபடுத்தும். அவை சரியாக செயல்படவில்லை என்றால், தசைப்பிடிப்பு ஏற்படும்.

கீழ் முதுகுவலி
சிறுநீரக கற்கள் அல்லது தொற்று இருந்தால், பெரும்பாலும் கீழ் முதுகில் வலி இருக்கும். இந்த வலி தொடர்ந்து இருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.

உயர் இரத்த அழுத்தம்
சிறுநீரகம் திரவ சமநிலையை கட்டுப்படுத்தும். அதன் செயல்பாடு பாதிக்கப்படும்போது, இரத்த அழுத்தம் அதிகரித்து இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.

உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள்!

இந்த அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்கலாம். சிறுநீரக கோளாறுகளை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து பராமரித்தால், எதிர்பாராத சிக்கல்களை தவிர்க்கலாம்.

(Disclaimer: இந்த கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக அல்ல. எந்தவொரு உடல்நிலை மாற்றத்தையும் உணர்ந்தால், உடனே மருத்துவ நிபுணரை அணுகவும்.)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *