அத்தனைக்கும் தீர்வு அடுக்களையில் இருக்கு!!

303.jpg

  • பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் இரத்த சோகை நீங்கும்.
  • கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கல்லீரல் வலுவடையும், பித்த நோய்கள் தீரும்.

  • கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும்  வைத்து, மை போல அரைத்து மோரில் கலந்து குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
  • வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
  • சுக்கு, மிளகு, திப்பிலி, கருப்பட்டி/ வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் குடித்தால் சளித்தொல்லை குறையும்.
  • அசைவ உணவுகள் சமைக்கும் போது கருஞ்சீரகம் சேர்த்து தாளிக்கவும். இதனால் உணவு நன்கு செரிமானம் ஆகிறது.
  • உணவுக்கு பிறகு பச்சை வெள்ளரிக்காய் மற்றும் சின்ன வெங்காயம் உண்பது சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.
  • முளைகட்டிய வெந்தயத்தை மென்று தின்றால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
  • வெண்பூசணி சாறெடுத்து உப்பு மிளகுத்தூள் சேர்த்து பருகினால் உடல் சூடு தணியும் .
  • புளிப்பு மாங்காய் பச்சை மிளகாய் , உப்பு சேர்த்து துவையல் அரைத்து தயிர் சாதம் சாப்பிட அருமையாக இருக்கும்.மசக்கையால் தவிக்கும் பெண்களுக்கு வாய்க்கு ருசியாக இருக்கும்.
  • வெற்றிலையை சுடுதண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து குடித்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்

    Summary :

    A collection of effective kitchen remedies using beetroot, carrot, spices, greens and vegetables that help improve digestion, immunity, blood sugar and overall health.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *