You are currently viewing ஒலிம்பிக் களத்தில் கிரிக்கெட் – லாஸ் ஏஞ்சல்ஸ்

ஒலிம்பிக் களத்தில் கிரிக்கெட் – லாஸ் ஏஞ்சல்ஸ்

0
0
2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு: 6 அணிகள் மட்டுமே பங்கேற்பு

முந்தைய ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிரான்சின் தலைநகரான பாரிஸில் நடந்தேறியது.

அடுத்த ஒலிம்பிக் ஆனது 2028-ம் வருடம் அமெரிக்க தேசத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெற உள்ளது.
இந்த 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

சுமார் 128 வருடங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் அரங்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு, 1900-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் தான் கிரிக்கெட் போட்டி கடைசியாக நடத்தப்பட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் இந்த ஒலிம்பிக்கில் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் வீதம், மொத்தம் 90 வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும். பெண்கள் பிரிவுக்கும் இதே விதிமுறை பொருந்தும்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி)

இந்தியா,
இங்கிலாந்து,
ஆஸ்திரேலியா,
பாகிஸ்தான்,
தென் ஆப்பிரிக்கா,
இலங்கை,
வெஸ்ட்இண்டீஸ்,
நியூசிலாந்து,
வங்காளதேசம்,
ஆப்கானிஸ்தான்,
ஜிம்பாப்வே,
அயர்லாந்து
உள்ளிட்ட 12 நாடுகள் முழுநேர உறுப்பினர்களாகவும், 94 நாடுகள் இணை உறுப்பினர்களாகவும் உள்ளன.

இருப்பினும், ஒலிம்பிக் போட்டியில் தகுதிச் சுற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 6 அணிகள் மட்டுமே விளையாட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary:

Cricket will be included in the 2028 Los Angeles Olympics, marking its return to the Olympic stage after 128 years since the 1900 Paris Games.

Six teams each in the men’s and women’s Twenty20 (T20) format will participate, with a total of 90 players per gender getting the opportunity to compete.

The six participating teams will be selected through a qualification process, despite the International Cricket Council (ICC) having numerous full and associate member nations.

Leave a Reply