லக்ஷ்மி கடாட்சம் பெற என்ன செய்ய வேண்டும்?

290.jpg

  • வீட்டில் உள்ள பெண்களை மரியாதையுடன் நடத்தவும்.பெண்களுடன் மரியாதையுடன் பழகவும்.
  • வீட்டில் மண் அகல் விளக்கு ஏற்றி நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றவும். அந்தத் தீபத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை எழுந்தருளுமாறு வேண்டவும். இதனால் லக்ஷ்மி மகிழ்ச்சி அடைவாள்.
  • சூரியன் மறையும் வேளையில் வீட்டைப் பெருக்கக் கூடாது.
  • ஒரு காலால் இன்னொரு காலைத் தேய்க்கவோ, தேய்த்துக் கழுவவோ கூடாது.
  • ப்ரஹ்ம முஹூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து விட வேண்டும்.
  • முடிந்தவரை தான,தருமங்கள் செய்து வரவும். குறிப்பாக வெள்ளிக்கிழமை மட்டுமாவது செய்வது நல்லது.
  • வீடு மற்றும் கடைகளில் நடராஜர், மலைகள், ஆறு, குளம் போன்ற படங்கள் வைத்தால் பணம் வரும் , போகும், தங்காது.
  • செவ்வாய் தசை நடப்பில் உள்ளவர்கள் இனிப்பு வாங்கி லக்ஷ்மிக்குப் படைத்து உண்ணுவதும், ஸ்வீட்ஸ் தானம் செய்வதும் லக்ஷ்மி கடாட்சத்தைப் பெருக்கும்.
  • 9கரித்துண்டுகளை வீட்டில் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். கரித்துண்டுகளின் அருகில் வைக்கப்பட்ட பொருள் எதுவானாலும் 4 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பயனற்றுப் போகும்.இது லட்சுமியை வெளியேற்றும்.
  • 1கூர்மையான பொருட்களை அன்பளிப்பாகக் கொடுக்கக் கூடாது.
  • 1பெண்கள் தலைவிரிக்கோலமாக இருக்கக்கூடாது.தலைவாரி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
  • 1கிழிந்த ஆடைகளை அணிந்து கொண்டு வீட்டில் வலம் வருவது தரித்திரத்தை வலிய அழைப்பது போல.
  • 1பசுமாட்டிற்க்கு பழம், அகத்தி கீரை அளிப்பது நல்லது.
  • 1அதிகாலை எழுந்து வீட்டின் வாசலைப் பெருக்கி கோலம் போடுவது லட்சுமியை அழைப்பது போல.
  • பறவைகளுக்கு தண்ணீர் , உணவு அளிப்பது சிறந்த சேவை. இறைவனின் படைப்புகளுக்கு சேவை செய்தால் அவன் மனம் மகிழும்.

    Summary :

    Easy traditional methods to invite Goddess Lakshmi’s blessings and improve prosperity, peace, and positive energy in your home.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *