உலகின் ஒரே சகலகலாவல்லுநர் இவரல்லவோ!

371.jpg

ஒருவர் எத்தனை துறைகளில் வல்லுநராக இருக்கலாம்?
ஒன்று, இரண்டு, மூன்று? அதிகபட்சம் ஐந்து? பதினைந்திற்க்கும் அதிகப்படியான பல்வேறு துறைகளில் ஒருவர் வல்லுநராக இருத்தல் இயலுமா?
தன் தாய்மொழியையே சரியாக எழுத இயலாத ஒருவர் எந்த துறையிலாவது மின்ன வாய்ப்புண்டா? இத்தனை  கேள்விகளுக்கும் பதில் அவர் ஒருவர் பெயர் தான்.
வியப்பில் ஆழ்த்தும் இந்த வினாக்களுக்கு நேர்மறை விடையாக “இயலும்” என்று ஒருவர் 67 ஆண்டுகள் (1452 CE to 1519 CE) வாழ்ந்து உறுதிபடுத்தியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா!

வித்தைகள் பல கற்றவர் :
  1.  ஓவியம் வரைதல்,
  2.  இயற்பியல் (குறிப்பாக ஒளியியல்),
  3.  உயிரியல்
  4. தாவரவியல்
  5. விலங்கியல்
  6.  உடற்கூறியல் (மருத்துவம்)
  7.  நீரியல்
  8. பறவையியல்
  9.  விமான விஞ்ஞானம் (முதல் ஹெலிகாப்டர் வடிவமைத்தார்)
  10.  பொறியியல்
  11.  போர்த் தொழில்நுட்பம்
  12. ஆடை வடிவமைப்பு (நீர்மூழ்கி ஆடை)
  13.  புவி வரைபடவியல்
  14.  கட்டட வடிவமைத்தல்
  15.  உலோகவியல்
  16.  புவியியல்
  17.  இசை உருவாக்கம்
  18.  இசைக்கருவி தயாரித்தல்
இன்னும் எத்தனை உள்ளதோ? கண்டறியாமல் வெளிவரவில்லையோ…
 பல பரிமாணங்களோடு வாழ்ந்த மாமனிதரே லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci). மோனாலிசா ஓவியம் இவரது சிந்தனை எனும் கடலில் ஒரு துளி எனில் அது மிகையாகாது!
உலகின் பொக்கிஷம் லியோனார்டோ டாவின்சி
இந்த மாமேதை இறந்து இந்த ஆண்டோடு 500 ஆண்டுகள் ஆகியும் அவரது பிம்பக் குறிப்புகள் (mirror image notes) அடங்கிய பல பக்கங்கள் இன்னும் பல துறை வல்லுநர்களையும் இன்றளவும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் என்பதே உண்மை.
சிறப்பு திறமைகள்:
இடமிருந்து வலம் எழுத வேண்டிய இலத்தீனை, வலமிருந்து இடமாக கண்ணாடிப்பிம்பம் போன்று எழுதுவதை வழக்கமாகக் கொண்ட இவரது பல வரைபடங்களில் உள்ள மாதிரிகள் சரிவரப் பணியாற்றுவதும் வியப்பின் உச்சம் என்றே சொல்லாம்.
இவரது மனித உடல்களைப் பற்றிய ஓவியங்களே இன்றைக்கும் ஆச்சரியம் தரக்கூடியது. ஸ்கேன் போன்ற எந்த ஒரு கருவிகளும் இல்லாத போது அவர் வரைந்த ஓவியங்கள் தத்ரூபமாக உள்ளது.
இவரைப் போன்றவர்களை பிள்ளைகளுக்கு  அறிமுகப்படுத்துவதால் உத்வேகம் வளரும்.
மேலும், சிறு குறைபாடுகள் கொண்ட பிள்ளைகளும் பெரும் சாதனையாளர்கள் ஆக வாய்ப்புண்டு என்ற உண்மையை பெற்றோர்களும், சுற்றியுள்ள மற்றோர்களும் உணரட்டும்.
சிறு மலர்கள் நல்ல ஆக்கத்துடன் , ஊக்கத்துடன் வளரட்டும்.

Summary :

Leonardo da Vinci excelled in over 15 fields—art, science, anatomy, engineering, music and more—making him history’s greatest polymath and an enduring inspiration.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *