மத்தியப்பிரதேசத்தில் இருமல் மருந்து கொடுத்ததால் – உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

045.jpg

போபால்: மத்தியப்பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்ததால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்த மருந்தை பரிந்துரைத்ததாக அரசு மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, இருமல் மருந்து குடித்த 11 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்த மருந்தை தயாரித்தது தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசேன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் என்பது பின்னர் உறுதியானது.

இந்நிலையில், அதே மருந்தை உட்கொண்ட மேலும் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் கூறியதாவது:

“நாங்கள் மத்தியப்பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் குழந்தை பிரகாஷ் யதுவன்ஷிக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்ய இருந்தோம். அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை கிடைக்காததால், தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால் எங்கள் குழந்தை தற்போது இல்லை. இதற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்,” என அவர்கள் வலியுறுத்தினர்.

விசாரணையில், அந்த மருந்தில் ‘டையெத்திலீன் கிளைக்கால் (48.6% w/v)’ என்ற நச்சுப்பொருள் கலந்திருந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, ‘கோல்ட்ரிஃப் சிரப்’ எனும் இருமல் மருந்தை அடுத்த அறிவிப்பு வரும் வரை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ளனர்.


Summary:
In Madhya Pradesh, the death toll of children who consumed a toxic cough syrup has risen to 14. The controversial syrup, manufactured by Sri Sain Pharmaceuticals in Tamil Nadu’s Kanchipuram, was found to contain the harmful chemical diethylene glycol.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *