மதுரை கோரிப்பாளையம் பாலம் விரைவில் திறப்பு — எவ் வேலு அப்டேட்!

224.jpg

மதுரை: மதுரை கோரிப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம், வரும் பொங்கல் பண்டிகைக்குள் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எவ் வேலு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: “மேலமடை மேம்பாலம் 97% பணிகள் நிறைவடைந்துள்ளன. ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்தப் பாலம், டிசம்பர் 7 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்படும். கோரிப்பாளையம் பாலம் ரூ.190 கோடி செலவில் நடைபெறுகிறது; நில எடுப்பு பிரச்சனை காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பணிகள் பொங்கல் முன்னர் முழுமையடையும்,” என்று கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது: “இரு பாலங்களுக்கும் பின் மதுரை தெற்குவாசல் – வில்லாபுரம் இடையிலான உயர்மட்ட மேம்பாலத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும். மேம்பால பாதுகாப்புக்காக தனி குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ஒப்புதல் அளித்த பின் மட்டுமே திறப்பு நிகழும்,” என்றார்.

இதன் மூலம் மதுரையில் போக்குவரத்து நெரிசல் குறையும், மேலும் பெரிய அளவில் நகர போக்குவரத்து மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary :
Madurai Goripalayam flyover to open by Pongal, says Minister E.V. Velu. CM Stalin to inaugurate Melamadai bridge on Dec 7.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *