கார்த்திகை தீபத் திருநாள் முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு

272.jpg

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கும்படி, மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மலைப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்ட பிறகு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். மேலும், தீப ஏற்றும் நிகழ்வுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க காவல்துறைக்கு ஆணையும் பிறப்பித்துள்ளார்.

கார்த்திகை திருநாளை முன்னிட்டு தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் எழுமலை ராம ரவிக்குமார் எனும் நபர் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் மனுவில், டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில், கோவில் நிர்வாகம் மலை உச்சியில் உள்ள பழமையான தீபத் தூணில் அல்லாது, பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற திட்டமிட்டுள்ளது; இது பழக்கத்திற்கும் சட்டத்திற்கும் முரணானது என கூறப்பட்டிருந்தது. மேலும், தர்ஹாவுக்கு அருகில் உள்ள 15 மீட்டர் தொலைவிலான தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு எந்த தடையும் இல்லை என்பதும் மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்திருந்தார். பின்னர் பல்வேறு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பிறகு, இன்று தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில், தர்ஹாவுக்கு அருகில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கோவில் நிர்வாகத்துக்கே இருப்பதாகவும், தனிப்பட்ட நபரின் கோரிக்கையை அனைவருக்கும் பொது கோரிக்கையாகக் கருதி வழக்கு தொடர முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பல்வேறு தரப்பினரின் வாதங்களை பரிசீலித்த பிறகு, கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Summary :

Madurai HC approves lighting the Karthigai Deepam at Tirupparankunram hill’s traditional Deepam pillar, following Judge Swaminathan’s inspection and hearing.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *