You are currently viewing Madurai Milk Bun Recipe | மதுரை பால் பன் ரகசியம்

Madurai Milk Bun Recipe | மதுரை பால் பன் ரகசியம்

0
0

மதுரை ஸ்பெஷல் பால்பன் வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி? – Madurai Milk Bun Recipe

பால் பன் :

மதுரைன்னா பரோட்டா, ஜிகர்தண்டாவோட, எல்லார் மனசுலயும் நிக்குறது பால்பன் தான். ரொம்ப சிம்பிளான, அதே நேரத்துல மெதுமெதுன்னு இருக்கற ஒரு இனிப்பு பன்.

ஆனா இப்ப அந்த டேஸ்ட்ட நம்ம வீட்டுலயே பண்ணலாம். ரொம்ப ஈஸியாவும் இருக்கும்.

தேவையான பொருட்கள் (Ingredients) :

மைதா மாவு – 2 கப்
பால் – 1/2 கப் (சூடாக)
சீனி (சர்க்கரை) – 4 டேபிள் ஸ்பூன்
ஈஸ்ட் –  1 டீஸ்பூன் (active dry yeast)
உப்பு – 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பால் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன் (விருப்பப்படி)
மேலே தடவ பால் , வெண்ணெய் – சிறிதளவு

செய்முறை (Preparation Method)

– சுடுநீரில் (சூடாக மட்டுமே, கொதிக்கக் கூடாது) 1 டீஸ்பூன் சீனி மற்றும் ஈஸ்ட் சேர்த்து கலந்து வைக்கவும். 10 நிமிடங்களில் நொதிக்க துவங்கி விடும்.

– ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா, சீனி, உப்பு, பால் பவுடர் சேர்க்கவும்.

– ஈஸ்ட் கலவையைவும் சேர்த்து, சிறிது சிறிதாக பால் ஊற்றி, மென்மையான மாவாக பிசையவும்.

– முடிவில் வெண்ணெய் சேர்த்து, 10 நிமிடம் நன்கு மசித்து மென்மையாக்க வேண்டும்.

– மாவை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் வைத்து, மூடி, வெப்பமான இடத்தில் 1 மணி நேரம் வைக்கவும்.

– இது இரட்டிப்பாக மென்யாக்க உதவும்.

– மாவை சிறிய பந்து வடிவமாக உருட்டி, பேக்கிங் ட்ரேயில் வைக்கவும்.

– மீண்டும் 30 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.

– பன்கள் பேக் ஆனதும், மேல் பாலை தடவி 180°C ல் preheat செய்யப்பட்ட ஓவனில் 20–25 நிமிடம் வரை ப்ரவுன் ஆகும் வரைக்கும் வேகவும்.

– வெளியே வந்தவுடன் வெண்ணெய் தடவினால், மேலே மென்மையான பளிச்சென இருக்கும்.

– சூடாக இருக்கும் போதே சாப்பிட்டால் பஞ்சு மாதிரி மென்மையாக இருக்கும்.

சிறந்த காம்போ :

– டீ உடன்
– பால் அல்லது ஜிகர்தண்டா
– மேலே பால்கோவா அல்லது கடலைப்பருப்பு ஸ்வீட் சேர்த்தும் சாப்பிடலாம்.

சிறிய குறிப்புகள்:

– பன்களை soft-ஆ வைத்திருக்க மாவை அதிகமாக பிசைவது முக்கியம்.
– ஈஸ்ட் fresh-ஆ இருந்தால் தான் பன்கள் நன்றாக வரும்.
– ஓவன் இல்லையெனில், குக்கர் அல்லது கடாயில் salt-bed-ல் low flame-ல் bake செய்யலாம்.

Summary:

This recipe provides a simple and easy method to prepare the famous Madurai Milk Bun at home.

Known for its soft and sweet texture, this popular treat can be made with basic ingredients like maida flour, milk, sugar, and yeast.

he recipe includes instructions for baking in an oven or alternative methods using a cooker or kadai.

Leave a Reply