இந்தியாவின் வருடாந்திர தூய்மை மதிப்பீட்டு அறிக்கை — ஸ்வச் சர்வேக்ஷன் 2025 (Swachh Survekshan 2025) — வெளியிடப்பட்டுள்ளது. இதில், மிகவும் அசுத்தமான நகரங்களின் பட்டியலில் தமிழகத்தின் மதுரை முதலிடத்தை பிடித்துள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதார வசதிகள், கழிவு மேலாண்மை, குடிமக்களின் ஈடுபாடு உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் நாடு முழுவதும் நகரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
அதில்,
-
மதுரை (தமிழ்நாடு) – 4,823 புள்ளிகள் (முதலிடம்)
-
லூதியானா (பஞ்சாப்) – 5,272 புள்ளிகள் (இரண்டாம் இடம்)
-
சென்னை (தமிழ்நாடு) – 6,822 புள்ளிகள் (மூன்றாம் இடம்) என இடம்பிடித்துள்ளன.
அதே பட்டியலில், ராஞ்சி நான்காம் இடத்திலும், பெங்களூரு ஐந்தாம் இடத்திலும், மும்பை எட்டாம் இடத்திலும், டெல்லி பத்தாம் இடத்திலும் உள்ளன.
மாறாக, மிகவும் தூய்மையான நகரங்களின் பட்டியலில் மத்தியப் பிரதேசத்தின் இந்தோர் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
சென்னை, பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்கள் பொருளாதார ரீதியில் முன்னிலையில் இருந்தாலும், கழிவுப் பிரிப்பு குறைபாடு, தண்ணீர் தேங்கல், திறமையற்ற சுகாதார மேலாண்மை போன்ற காரணங்களால் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
Summary :
Swachh Survekshan 2025 ranks Madurai as India’s dirtiest city. Chennai at 3rd spot, while Indore tops clean city list again.







