மலாய் எக் மசாலா-malai egg masala எப்படி செய்வது என்று பார்ப்போமா?

293.jpg

முட்டை சைவமா அசைவமா என்ற குழப்பம் நீடித்தாலும் முட்டை பெரும்பாலானவர்களுக்கு விருப்பமான ஒன்று. முட்டை அடை , முட்டை ஆம்லெட்
முட்டைக் குழம்பு என விதவிதமாக செய்வார்கள். வித்தியாசமான சுவையில் முட்டையை பாலுடன் சேர்த்து சமைத்தால் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
முட்டை -4
பச்சை மிளகாய் -4
பெரிய வெங்காயம் -2
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1டீஸ்பூன்
கரம் மசாலா தூள் -1டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – 1 கப்
நறுக்கியது
பால் – 1/4 கப்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
வேகவைத்த முட்டைகளை சரிபாதியாக வெட்டிக் கொள்ளவும்.
நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாயை நைசாக அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அதில் அரைத்த வெங்காயம் , பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்து கொள்ளவும்.
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இந்த கலவை வதங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். பின்னர் இதில் பாலை ஊற்றவும்.
பால் ஊற்றியதும் அதில் உப்பு , மிளகுத்தூள் , கரம்மசாலா , சீரகத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் மெல்லிய தீயில் வைக்கவும்.
பால் கலவையில் இருந்து எண்ணெய் விட்டு வரும் போது நறுக்கிய முட்டைகளை சேர்க்கவும்.
மசாலா வெந்து சுருள் வரும் போது நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கவும்.
பிரியாணி , சப்பாத்தி , பூரிக்கு அருமையாக இருக்கும்.
பேலியோ டயட்டில் இருப்பவர்கள் பால் சேர்க்காமல் இதனை செய்து பார்க்கலாம்.
சைவப்பிரியர்கள் முட்டைக்கு பதிலாக கேரட் , பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், பச்சைப்பட்டாணி என விருப்பம் போல காய்கறிகள் சேர்த்து இந்த மலாய் வெஜ் மசாலாவை செய்து பார்க்கலாம். சுவை அள்ளும். காய்கறிகள் வைத்து செய்து பார்க்கும் போது வெண்ணெய் சேர்த்து மசாலாவை வதக்கவும். சுவையும் மணமும் கூடும்.

Summary :

Step-by-step guide to make Malai Egg Masala with milk, spices, and herbs. Serve with rice, chapati, or puri. Vegetarian variation included.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *