பிளாடர் ஃபுல்.. ஆனால் யூரின் போனா வரலையா..? ஆண்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சனைக்கு காரணம் என்ன..?
சிறுநீர்ப்பை நிறைந்தும் ஆண்களுக்கு சிறுநீர் கழிக்க முடியாமல் போவது ஏன், அதற்கான காரணம் என்னவென்று தெரிந்துகொள்வது முக்கியம்.
சென்னை மருத்துவர் சஞ்சய் பிரகாஷ் ஜே, இதற்கான காரணங்களையும் தடுக்கும் முறைகளையும் விளக்குகிறார்.
சிறுநீர் கழிப்பதில் சிரமம் உள்ளவர்களுக்கு, சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் வெளியேறுவது தடைபடலாம். இதனால் கடுமையான அடிவயிற்று வலியுடன் சிறுநீர் கழிக்க முடியாத நிலை ஏற்படலாம்.
சிலருக்கு நாள்பட்ட சிறுநீர் தேக்கத்தால் அடிவயிற்று வலி இல்லாமலும், சிறுநீர்ப்பை பெரிதாக இல்லாமலும் சிறுநீர் வெளியேறாமல் போகலாம். இதுவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு காரணம்.
சிறுநீர் கழிக்க முடியாமல் போவதற்கான காரணங்கள் என்ன?
சிறுநீர் சரியாகப் போகாததற்கு புரோஸ்டேட் வீக்கம், சிறுநீர்க் குழாயில் அடைப்பு அல்லது சுருக்கம், சிறுநீர்ப்பை கற்கள் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் காரணங்களாக இருக்கலாம். இவை சிறுநீர்ப்பையின் செயல்பாட்டைப் பாதித்து சிறுநீர் கழிப்பதை கடினமாக்கலாம்.
என்ன செய்ய வேண்டும்?
சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருந்தா உடனே சிறுநீரக டாக்டரைப் பாருங்க. அப்போ அல்ட்ராசவுண்ட், சிறுநீர் டெஸ்ட்னு சில அடிப்படை பரிசோதனைகள் பண்ணி என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்கலாம். கடுமையான வலியோட சிறுநீர் போகாம இருந்தா தற்காலிகமா ஒரு குழாய் போட்டு சரி பண்ணுவாங்க.
Summary : Men experiencing the inability to urinate with a full bladder may have underlying issues like prostate problems, blockages in the urinary tract, bladder stones, or nerve damage affecting bladder control. Prompt medical evaluation is crucial for diagnosis and appropriate treatment.