நம் பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தில் முக்கியமான இடம் வகிக்கும் ஒன்றாக மணத்தக்காளி (Black Nightshade) திகழ்கிறது. இது ஒரு சாதாரண கீரை அல்ல ,பலவிதமான நோய்களுக்கு இயற்கையான மருந்தாக பயன்படுகிறது.
குறிப்பாக இதன் இலைகள் மற்றும் பழங்கள் கல்லீரல் ஆரோக்கியம், ஜீரண மண்டலம் மற்றும் உடலின் உள் வெப்பம் குறைப்பதில் சிறந்த பலனை தருகின்றன.
மணத்தக்காளி கீரையால் தயாரிக்கும் சூப் நம் உடலை சுத்தம் செய்யும் டிடாக்ஸ் டிரிங்க் போல செயல்படுகிறது.
தினசரி உணவில் இதை சேர்த்தால் உடல் சோர்வு குறையும், தோல் பிரச்சனைகள் நீங்கும், மேலும் இயற்கையான புத்துணர்ச்சி கிடைக்கும்.
மணத்தக்காளி சூப் :
தேவையானவை
-
மணத்தக்காளி கீரை – 1 கப்
-
அரிசி களைந்த தண்ணி -2 கப்
-
பொடியாக அரித்த வெங்காயம் -ஒரு கைப்பிடி
-
தக்காளி -1
-
பச்சை மிளகாய் -3
-
தேவைக்கு தேங்காய்ப்பால் – 1 கப்
-
ஒரு சிட்டிகை உப்பு
தாளிக்க :
-
எண்ணெய் – ஒரு டிஸ்பூன் ,
-
கடுகு,உளுத்தப்பருப்பு -தலா அரை டிஸ்பூன்,
-
சோம்பு ,சீரகத்தூள் -தலா அரை டிஸ்பூன்
செய்முறை :
கீரையைக் கழுவி ஆய்ந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுத்தப்பருப்பு தாளிக்கவும். பின் சோம்பு, சீரகத்தூள் போட்டு ..அதோடு பச்சை மிளகாய் போட்டு வதக்கவும் .
அதில் அரிசி களைந்த தண்ணி ஊற்றி அதிலேயே மஞ்சள்தூள் ,உப்பு ,மணத்தக்காளி கீரை ,பொடியாக அரிந்த தக்காளி,வெங்காயம் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்த பின் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கிவிட்டால் சூப் ரெடி .
இந்த சூப் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது மட்டுமில்லாமல் , சிறிது மிளகு, பூண்டு சேர்த்தால் ருசியும் நலனும் இரட்டிப்பாகும்.
மணத்தக்காளி சூப் – மருந்தாகவும், உணவாகவும் உங்களை காப்பாற்றும் இயற்கை வரம்.
இந்த சூப் வாய்ப்புண் ,வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. தொடர்ந்து நான்கு நாட்கள் சாப்பிட்டால் புண் இருந்த இடம் காணாமல் போகும்.
Summary:
Manathakkali soup is a traditional Tamil herbal drink known for its powerful healing properties. Made from the nutrient-rich leaves of the black nightshade plant, it helps detoxify the body, cool internal heat, and strengthen liver health. A warm bowl of this soup nourishes your body while offering a comforting, earthy flavor.