சென்னை: ஆலங்குளம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ மற்றும் ஓபிஎஸ் தரப்பின் முக்கிய ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 2021 தேர்தலில் வெற்றி பெற்றவர் மனோஜ் பாண்டியன். ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் பிரிவினை அரசியல் நடத்தியபோது அவருடன் உறுதியாக இருந்தவர் இவர்.
சமீபத்தில் அதிமுக உள்பகை அதிகரித்ததைத் தொடர்ந்து மனோஜ் பாண்டியன் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபுவின் காரில் இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அவருக்கு சால்வை அணிவித்து திமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது அமைச்சர் துரைமுருகனும் உடனிருந்தார்.
திமுகவில் இணைந்திருப்பது, ஓபிஎஸ்சின் அணிக்கு பெரிய பின்னடைவு எனக் கருதப்படுகிறது. காரணம், அவர் ஓபிஎஸ் தரப்பில் “வலது கரம்” என அழைக்கப்பட்டவர்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் பூங்கோதயை 3,539 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த மனோஜ் பாண்டியன், தற்போது திமுகவுடன் சேர்வதன் மூலம் தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சிக்கு ஊக்கமளித்துள்ளார்.
Summary :
AIADMK MLA and OPS loyalist Manoj Pandian joins DMK in front of CM Stalin, marking a political setback for the OPS camp in Tamil Nadu.








