சமையலறையில் விஷம்: மைக்ரோபிளாஸ்டிக் ஆபத்து!
மைக்ரோபிளாஸ்டிக் எல்லா இடங்களிலும் இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், உண்ணும் உணவுகள் வரை, மனித முடியின் இழையை விட சிறிய அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் நம்மைச் சுற்றி உள்ளன. அவை நாம் உணராமலேயே நம் உடலுக்குள் செல்கின்றன.
கடல் உணவு, உப்பு, சர்க்கரை, பழங்கள், காய்கறிகள் மற்றும் தேநீர் பைகள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் நம் இரத்த ஓட்டத்தில் அதிக அளவு மைக்ரோபிளாஸ்டிக்ஸை வெளியிடுகின்றன.
இது மூளை, கல்லீரல், சிறுநீரகம், இதயம் மற்றும் பிற முக்கியமான உறுப்புகளுக்குள் நுழைந்து சில ஆபத்தான நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது.ஒரு ஆய்வுக் கட்டுரையில், ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிலில் 2,40,000 நானோபிளாஸ்டிக்ஸ் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2024 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, உணவு தயாரிப்பின் ஒரு பகுதியாக சூடாக்குதல், குளிர்வித்தல், கலத்தல், துண்டாக்குதல் மற்றும் சேமித்தல் போன்ற செயல்முறைகள் நிகழும் நம் சமையலறைகளிலேயே மைக்ரோபிளாஸ்டிக் மாசு தொடங்கலாம்.
மேலே குறிப்பிடப்பட்ட ஆய்வின் அடிப்படையில், நம் மைக்ரோபிளாஸ்டிக் வெளிப்பாட்டை அதிகரிக்கும் சில சமையலறை பொருட்கள் இங்கே:
1.பிளாஸ்டிக் கொள்கலன்கள்
2.பழைய பிளாஸ்டிக் சமையல் பாத்திரங்கள்
3.பிளாஸ்டிக் ஜாடிகளுடன் கூடிய கலப்பான்கள்
4.சுத்தம் செய்யும் பஞ்சு(Sponge Scrubber)