அம்மா சமையலின் ரகசியங்கள் – பகுதி 1

Untitled-design-45.png

அம்மா கைகளில் வரும் சுவை எந்த ஒரு 5 ஸ்டார் ஹோட்டலிலும் வராது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. அந்த சுவையின் ரகசியம் – அன்பு, அனுபவம், மற்றும் சில நுணுக்கங்கள் அதை பற்றி இந்த தொடரில் ஒரு சில பகுதிகளா இனி வரும் நாட்களின் பாப்போம்.

வீட்டில் உள்ள எளிய பொருட்களால் அற்புதமான உணவுகளை எப்படி செய்யலாம் மற்றும்
அம்மா சமையலின் ரகசியங்களை ஒன்றன் பின் ஒன்றாக இனி வரும் தொடரில் பாப்போம் .

Episode:1

  1. இட்லிப் பொடி செய்யும் பொழுது சிறிது கருவேப்பிலையை வறுத்து சேர்த்து அரைக்கும் போது ருசியாகவும், உடலுக்கு நன்மையும் தரும்.

  2. ரவையை ,டால்டா /நெய் விட்டுச் சிவக்க வறுத்து காய்ச்சிய பாலில் ஊறவைத்துப் பிறகு சர்க்கரைப் பாகு வைத்துக் கேசரி கிளறினால் அதிக டால்டா மற்றும் நெய் தேவையில்லை ,ருசியும் இரட்டிப்பாகும்.

  3. குலோப் ஜாமுன் பாகில் ஒரு ஸ்பூன் தேன்விட்டு இறக்கினால் பாகு உறையாமலும், கெட்டப் போகாமலும் இருப்பதுடன் சுவையும் கூடுதலாகி நன்றாக இருக்கும்.

  4. ரவா உப்புமா மிஞ்சி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவை கலந்து வடைபோல் தட்டி எண்ணையில் பொரித்து எடுத்தல் இன்ஸ்டன்ட் வடை ரெடி.

  5. லட்டு செய்யும் போது கலவையில் இரண்டு சொட்டு ஏதாவது ஒரு பழ எசென்ஸ் விட்டு கலந்து பிடியுங்கள். சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

  6. பொரியல் செய்யும் பொழுது காரப்பொடிக்கு பதிலாக தேங்காய் துருவல் சேர்த்தால்  ,பொரியலின் டேஸ்ட் நன்றாக இருக்கும்

  7. வெண்டைக்காய் கறி செய்யும் பொது சிறிது தயிர் ஊற்றி வதக்கினால் வழவழப்பு நீங்கி மொறுமொறுப்பால் சுவையாக இருக்கும் .

  8. பிரஷர் குக்கர் யூஸ் பண்ணாத நேரங்களில் முடி வைக்கக்கூடாது.

  9. தினமும் சேகரிக்கும் பால் ஆடையை வாரத்தில் ஒரு நாள் இரவில் சிறிது தயிர் ஊற்றி ஊறவைத்து மறுநாள் காலையில் ஒரு சமையல் கரண்டியால் சுழற்றி கொண்டிருந்தால் ஐந்தே நிமிடத்தில் வெண்ணெய் திரண்டு வரும்.

  10. புதினா அதிகமா கிடைக்கும் நேரங்களில் அதை வாங்கி உலர வைத்துக் கொண்டால் ,மசாலா சேர்த்து தயாரிக்கும் உணவுகளில் சேர்ப்பதால் உணவு மணமாக இருக்கும்.

  11. கொழுக்கட்டைக்கு மாவு கிளறும் போது தண்ணியுடன் ஒரு கரண்டி பால்விட்டுக் கிளறினால் கொழுக்கட்டை விரிந்து போகாமல் இருக்கும்.

  12. முட்டைக்கோசை நறுக்கும் போது அதில் உள்ள தண்டுகளை எறிந்து விடாமல் அவற்றை சாம்பாரில் போட்டு சமைத்து சாப்பிட்டால் பிரமாதமாகவும் சுவையாகவும் இருக்கும்.

  13. தொடர்ந்து முட்டைகோஸை சாப்பிடுபவர்களுக்கு நெஞ்சுவலி வராது, அடிக்கடி ஜலதோஷமும் பிடிக்காது.

  14. இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்துநாள் வரை புதிதாகவே இருக்கும்.

  15. பஜ்ஜிக்கு காரம் அதிகம் விரும்பாதவர்கள், உப்பு ஓமம் அரைத்துவிட்டுக் கலந்து பஜ்ஜி செய்து பாருங்கள் ,சுவை பிரமாதமாக இருக்கும்.

மேல உள்ள குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் எங்களுக்கு கமெண்ட்ஸ் or Feedbacks குடுங்க, அதன் முலம் நாங்க இன்னும் சில எபிஸோட்ஸ் பதிவிடுவோம்.

Summary:

This series reveals the hidden magic behind Mom’s cooking — simple ingredients turned into extraordinary dishes. Discover step-by-step traditional and modern recipes, all made with love and everyday kitchen items.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *