இதற்கு முந்தைய பதிவில் அம்மா சமையலின் ரகசியங்கள் episode 1 பதிவிட்டோம் அந்த பதிவை இன்னும் பார்க்காதவர்கள் கண்டிப்பாக பாருங்க.! சுவையும் அனுபவமும் இரண்டையும் தரும்!
இன்று எபிசோட் 2-ல், அம்மா சமையலில் மறைந்திருக்கும் இன்னும் சில சிறு நுணுக்கங்களையும், வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய புதிய ரெசிபிகளையும் பாப்போம் வாங்க. அம்மா கையால் வரும் அந்த வசிகரமான சுவையை மீண்டும் உணரலாம்.
Episode: 2
- கொத்தமல்லி சட்னி மீந்து போய்விட்டால், மோரில் சட்னியைப் போட்டுக் கரைத்தால். மசாலா மோர் போலச் சுவையாய் இருக்கும்.
- வெண்ணையில் உப்புத்தூவி வைத்தால் அது சில நாட்கள் ஆனாலும் கெடாமல் இருக்கும்.
- உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்ய சீவிய பின் உடனடியாக பச்சைத் தண்ணீரில் போட்டு வடிய விட்டு வறுத்தால் சிப்ஸ் ,சிவப்பு நிறம் இல்லாமல் இருக்கும்.
- கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
- தேங்காய்ச் சாதம் ,எலுமிச்சைச் சாதம் செய்யும் போது கடலைப் பருப்புக்கு பதிலாகபொட்டுக்கடலை அல்லது வேர்க்கடலை சேர்த்தால் சுவையும், சத்தும் அதிகம் கிடைக்கும்.
- பட்டாணி சமைக்கும் போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் நல்ல மனமாக இருக்கும்.
- நறுக்கிய வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணை கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரெஷ்ஷாக இருக்கும்.
- தேங்காய் மூடியை தண்ணீரில் வைத்தால் அல்லது மூடியில் சிறிது உப்பு தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.
- பருப்பு நன்றாக வேகவேண்டுமென்றால் பருப்புடன் சிறிதளவு நெய்யைச் சேர்த்து வேகவிட்டால் போதும்.
- இஞ்சியை ஈரமணலில் புதைத்து வைக்க வேண்டும்.
- சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல், முளை வராமலிருக்கும்.
- வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் ஆகியும் கெடாமல் இருக்கும்.
- வாழைத்தண்டுக் கூட்டு மற்றும் பொரியல் செய்யும் பொழுது அதனுடன் சிறிது முருங்கைக் கீரையும் சேர்த்துச் செய்தால் சுவையும் மணமும் மிக நன்றாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.
- பருப்பு துவையலுக்கு தேங்காய் இல்லையென்றால் இரண்டு பல் பூடை உறித்து வைத்து அரைத்தால் துவையல் சுவையாக இருப்பதோடு கமகமவென்றும் மணக்கும்.
- கிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது.எளிதில் ஜீரணமாகாது.
அம்மா சமையல் என்பது ஒரு சுவை மட்டும் இல்ல — அது ஒரு நினைவுகள். அந்த அன்பும் அனுபவமும் கலந்து வீட்டில் முயற்சி செய்து பாருங்க. சிறு பொறுமையுடன், அன்புடன் சமையல் செய்யுங்கள் எல்லா உணவுகளும் ஒரு நினைவாக மாறும். அடுத்த எபிசோடில் இன்னும் சில ருசியான ரெசிபிகளோடு சந்திப்போம்.
Summary:
In Part 2 of Mom’s Cooking Secrets, we uncover more traditional and flavorful recipes straight from Mom’s kitchen. Learn the little tricks and love-filled touches that turn simple dishes into unforgettable meals. From spice balance to perfect texture, every secret matters. Experience the warmth, taste, and nostalgia of home cooking once again!