அம்மா சமையலின் ரகசியங்கள் தொடரின் மூன்றாவது பகுதியுக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.
முன்னர் பார்த்த இரண்டு பகுதிகளில் நாம் சாம்பார், பொரியல், போன்ற பாரம்பரிய உணவுகளின் சுவையை உயர்த்தும் சிறு ரகசியங்களை பார்த்தோம்.
இந்த பகுதியில் சிறு ரகசியங்களை மற்றும் வீட்டுக் குறிப்புகளை நாம் அறிந்துகொள்ளப் போகிறோம். அம்மா சமையலின் ரகசியங்கள் – பகுதி மூன்று.
Episode- 3
1. அடைக்கு அரைக்கும் போது ஒரு கேரட்டை துருவிப் போட்டு அரைத்து அடைவார்த்தல் அடை நல்ல நிறத்துடன் ருசியாக இருக்கும்.
2. கருணைக்கிழங்கை வேக வைக்கும் போது கொஞ்சம் புளிய இலைகளையும் சேர்த்துக் கொண்டால் கிழங்கின் அரிக்கும் தன்மையை இது எரித்துவிடும்.
3. கீரை பயத்தம்பருப்பு கூட்டு செய்யும்போது ஒரு கப் பால் சேர்த்தால் மணமாக இருக்கும்.
4.பச்சைக் கொத்தமல்லியும் ,கறிவேப்பிலையும் வதக்கக்கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.
5. வெல்லம் சேர்த்து செய்யும் பொருட்களுக்கு நெய் ஊற்றுவதால் சுவையும் மணமும் கூடும்.
6. சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் உங்களது கையில் சப்பாத்தி மாவு ஓட்டாது.
7. வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத்துணியை தொங்க விட்டால் புகை காணாமல் போய் விடும்.
8.துணிகளில் எண்ணெய் கரையோ ,கிரிஸ் தாரோ பட்டுவிட்டால் அவற்றைத் துவைக்கும்போது சில சொட்டுக்கள் தலைவலி தைலம் விட்டு கழுவினால் கறைகள் போய்விடும்.
9. குழந்தைகளின் காலில் முள் குத்தியிருந்தால் முள் எடுக்கும் முன், காலில் சிறிது ஐஸ் கட்டி வைத்த பிறகு முள் எடுத்தால் கால் மரத்து போய் வலிக்காது.
10.எப்பொழுதாவது உபயோகிக்கும் ஷூக்களில் (Shoes) கற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு ஷூ விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அண்டாது.
11. வெள்ளி பொருட்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.
12. மாம்பழத்தில் சர்க்கரை அளவு அதிகம். எனவே நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
13. காய்த்த எலுமிச்சை ,ஆரஞ்சுத் தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது.
14. வீட்டு பக்கத்தில் எறும்பு புற்று இருந்தால் ,கடையில் மூக்குப்பொடி வாங்கித் தண்ணியில் கரைத்து எறும்புப் புற்றில் ஊற்றினால் / தெளித்துவிட்டால் எறும்புகள் மாயமாய் மறைந்து விடும்.
15. வீட்டில் ஹோமங்கள் செய்யும்போது ஒரு டேபிள் ஃபேனை ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்தால் புகை உள்ளே பரவாது.
வீட்டு குறிப்புகள் என்பவை நம்முடைய அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும். அம்மா, பாட்டி சொல்லிய இந்த சின்ன டிப்ஸ்களே இன்று நம் வீட்டை சுத்தமாகவும் சீராகவும் வைத்திருக்க உதவுகிறது என்பது தான் உண்மை.
பழைய வழிகளில் புதுமை சேர்த்தால் வீட்டு வேலைகள் சுலபமாகி, நேரம் மிச்சம் ஆகும்.
அடுத்த பதிவில் இன்னும் பயனுள்ள வீட்டு குறிப்புகளில் சந்திப்போம்.
Summary:
In Part 3 of Mom’s Cooking Secrets, we uncover more traditional kitchen wisdom straight from mom’s heart. Learn how small tips make rice softer, gravies tastier, and spices perfectly balanced. These timeless tricks turn ordinary dishes into flavorful, heartwarming meals. Experience the true essence of home-cooked food filled with love and tradition.