அம்மா சமையலின் ரகசியங்கள் பகுதி-4

Untitled-design-56.png

இந்தப் பகுதி 4-லில் , அம்மா சமையலில் இருக்கும் சின்ன சின்ன ரகசியங்கள், குறிப்பு டிப்ஸ், மற்றும் அதன் பாரம்பரிய சுவையை காப்பாற்றும் வழிகளை பற்றிப் பார்க்கப் போகிறோம். சில சமயங்களில் மசாலா அளவு கூட சுவையில் பெரிய வித்தியாசத்தை காணலாம்.

அந்த சுவை ரகசியங்களை நினைவுகூரும் வகையில் இந்த தொடரில், ஒவ்வொரு உணவின் பின்னாலும் இருக்கும் அம்மாவின் அன்பும் அனுபவமும் நம்மை மீண்டும் அந்த பழைய வீட்டுச் சுவைக்குத் திரும்ப கொண்டு செல்லும்.

Episode :4

1. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.

2. பூண்டு ,வெங்காயம் நறுக்கிய கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

3. பக்கோடா செய்யும்போது மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமானால் மாவைக் கலக்கும் போது சிறிதளவு நெய்யும்,உப்பும் தயிரையும் போட வேண்டும்.

4. கடலை எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது புளியை போட்டு வைத்தால் எண்ணெய் கெடாமல் இருக்கும்.

5. வாழைப்பழம் சீக்கிரம்கருத்துவிடாமல் இருக்க ஈரத்துணியால் சுத்தி வைத்தால் பிரெஷ்ஷாக இருக்கும்.

6. உணவில் அதிக அளவு உப்பு சேர்த்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்பிடியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு இருக்காது.

7.முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிதளவு ரீ ஃபைண்ட் ஆயில் தேய்த்தால் முட்டை கெடாது.

8. பூந்தொட்டியில் ரோஜாச் செடியை நடும்போது அத்துடன் இரண்டு சிறிய வெங்காயத்தை அரைத்து ஊற்றினால்,பூச்சிகள் செடியே அரிக்காமல் இருக்கும்.

9. மாதுளை பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கு உறுதி கிடைக்கும்.பல்லும் பளிச்சென்று இருக்கும்.

10. துணி அயர்ன் செய்யும்போது ஜரிகை உள்ள சேலையாய் இருந்தால் உடம்பில் ஜரிகை படாமல் அயர்ன் செய்ய வேண்டும். ஜரிகை முலம் ஷாக் அடிக்க சான்ஸ் இருக்கு.

11. அரை வாளி தண்ணீரில் நான்கு கரண்டிவினிகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.

12.ஆணி அடிக்கும்போது நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும்.

13. கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணையை தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.

14. சீடை செய்யும் பொது வெடிக்காமல் இருக்க சீடையை ஊசியினால் குத்திய பிறகு எண்ணையில் போடுங்கள்.

15. எண்ணெய் பலகார டப்பாவில்,உப்பைத் துணியில் முடிந்து வையுங்கள். காரல் வாடை வராது.

நாமும் அம்மா சுவையை காக்க வேண்டுமென்றால், அம்மா சொன்ன சின்ன சின்ன குறிப்புகளை மனதில் வைக்கணும். இந்த தொடரின் மூலம், அந்த பாரம்பரிய சுவையையும் அன்பையும் நம்மால் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல முடியும்.

Summary:

This part of the “Mom’s Cooking Secrets” series explores simple, traditional kitchen tips. Learn how small changes and ingredients create unforgettable flavors. Each recipe holds love, patience, and wisdom passed down from generations. Rediscover the taste of home that only a mother’s touch can bring.

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *